இளைமை இனத்தாரே !
செந்தமிழில் கசப்பதென்ன இளமையினத் தாரே - அதன்
செய்யுளில் புளிப்பதென்ன இளமையினத் தாரே !
நந்தமிழைத் தவிர்ப்பதென்ன இளமையினத் தாரே - அதில்
நாலுமொழி கலப்பதென்ன இளமையினத் தாரே !
பிறமொழியில் இருப்பதென்ன இளமையினத் தாரே - தமிழ்
பிரியவிட்ட சேதியென்ன இளமையினத் தாரே !
சிறப்போடு திகழ்வதென்ன இளமையினத் தாரே - தமிழ்
சீரிளமைக் கணித்ததென்ன இளமையினத் தாரே !
கண்மூடித் திரிவதென்ன இளமையினத் தாரே - அடக்
கண்டதையும் புகழ்வதென்ன இளமையினத் தாரே !
உண்மையுணர் விழப்பதென்ன இளமையினத் தாரே - தமிழ்
உன்னதத்தை மறப்பதென்ன இளமையினத் தாரே
நாவிலே இனிப்பதென்ன இளமையினத் தாரே -தினம்
நம்மைநமக் களிப்பதென்ன இளமையினத் தாரே !
ஆவலை வளர்ப்பதென்ன இளமையினத் தாரே - தமிழ்
ஆரமுதை ஒத்ததென்ன இளமையினத் தாரே !
முதன்முதலாய்ப் பிறந்ததென்ன இளமையினத் தாரே - எழில்
முத்தமிழ்தான் ஐயமென்ன இளமையினத் தாரே
விதவிதமாய்ச் சொலிப்பதென்ன இளமையினத் தாரே - தமிழ்
விசித்திரத்தை மறப்பதென்ன இளமையினத் தாரே !
-விவேக்பாரதி
14.03.2017