பொங்கல் வாழ்த்து
கரும்பைப் போல இனிப்பாக
கடமைப் பொங்கல் பொங்கட்டும்
விரும்புகின்ற பொருள் யாவும்
வீதி தோறும் பொங்கட்டும்
அருமையான பண்பாடும்
அகத்தில் எங்கும் பொங்கட்டும்
திரும்புகின்ற திசை யெல்லாம்
திரளாய்ப் பொங்கல் பொங்கட்டும்
சூரியனை நாம் வணங்கிடுவோம்
சுறுசுறுப்பாய்த் துயிலெழுவோம்
காரியங்கள் செய்திடுவோம்
கலையாய்ப் பானை வைத்திடுவோம்
வாரி அரிசி தானிடுவோம்
வண்ண வெல்லம் சேர்த்திடுவோம்
பூரிப் பாக அதுபொங்கப்
பொங்கலோ பொங்கல் என்றிடுவோம் !
கட்டிக் கரும்பை உடைத்திடுவோம்
களித்துக் களித்துத் தின்றிடுவோம்
கொட்டிக் கும்மி கொட்டிடுவோம்
குலவைச் சத்தம் இட்டிடுவோம் !
பட்டில் துணிகள் போட்டிடுவோம்
பலநாள் இன்றேல், இந்ததினம்
மட்டு மாவது உழவர்களை
மனத்தில் நினைப்போம் மகிழ்வோமே
-விவேக்பாரதி
15.01.2017
கடமைப் பொங்கல் பொங்கட்டும்
விரும்புகின்ற பொருள் யாவும்
வீதி தோறும் பொங்கட்டும்
அருமையான பண்பாடும்
அகத்தில் எங்கும் பொங்கட்டும்
திரும்புகின்ற திசை யெல்லாம்
திரளாய்ப் பொங்கல் பொங்கட்டும்
சூரியனை நாம் வணங்கிடுவோம்
சுறுசுறுப்பாய்த் துயிலெழுவோம்
காரியங்கள் செய்திடுவோம்
கலையாய்ப் பானை வைத்திடுவோம்
வாரி அரிசி தானிடுவோம்
வண்ண வெல்லம் சேர்த்திடுவோம்
பூரிப் பாக அதுபொங்கப்
பொங்கலோ பொங்கல் என்றிடுவோம் !
கட்டிக் கரும்பை உடைத்திடுவோம்
களித்துக் களித்துத் தின்றிடுவோம்
கொட்டிக் கும்மி கொட்டிடுவோம்
குலவைச் சத்தம் இட்டிடுவோம் !
பட்டில் துணிகள் போட்டிடுவோம்
பலநாள் இன்றேல், இந்ததினம்
மட்டு மாவது உழவர்களை
மனத்தில் நினைப்போம் மகிழ்வோமே
-விவேக்பாரதி
15.01.2017