இரவாட்டம்
செக்கச் சிவந்திட்ட வானத்தி லேயந்தச்
சந்திர னின்னுரு கண்டேன் - அதன்
சங்குவெள் ளைநிறம் கண்டேன் - இருள்
சாடும் குணத்தினைக் கண்டேன் - அதைச்
சார்ந்திங் கொளிர்விடும் வண்ணவிண் மீன்களைச்
சான்றெனப் பாவுக்கு மொண்டேனடி !
பக்க மிருந்திடும் யாவும் கருத்திடப்
பட்டப் பகல்மறைந் தாச்சு - எழில்
பற்றும் சிவப்பெழும் பூச்சு - இதில்
பாரினில் துன்பங்கள் போச்சு - அட
பார்க்கும் திசையெலாம் மக்கள் குவிந்தனர்
பாட்டுகள் ஆட்டங்க ளாச்சுதடி !
ஆடிய மாந்தரின் அன்பு முகத்தினில்
ஆண்டவன் வந்தனன் பாரீர் - இர
வாட்டம் தனில்வந்து சேரீர் ! - இதன்
ஆனந்தம் ஊருக்குக் கூறீர் ! - இந்த
அண்ட சராசரம் கண்டு குலுங்கிட
ஆட்டங்கள் ஆடுவம் வாரீரிங்கே !
ஓடின துன்பங்கள் ஒட்டின இன்பமென்
றோதித் தினந்தினம் பாடீர் ! - மிக
ஒய்யாரம் பொங்கிட ஆடீர் ! - சுடர்
ஒன்றித் திகழ்ந்திடக் கூடீர் ! - அதன்
ஒண்மையி லேபுதுத் திண்மையி லேமதி
ஒன்ற மனங்களை நாடிடுவீர் !
யாவரும் ஒன்றெனும் நல்ல சமத்துவம்
யாண்டும் நிலைத்திடச் செய்து - அதை
யாரும் மதித்திட நெய்து - மழை
யாவருக் காகவும் பெய்து - இனி
யாரும் தனியில்லை என்ற முழக்கங்கள்
யாவரின் நெஞ்சுளும் உய்திடட்டும்
மாவலி எய்தியிம் மண்ணினில் வாழ்ந்திட
மாபெரும் சூளுரை ஏற்போம் - பின்
மானிடர் எங்ஙணம் தோற்போம் ?? - களி
மாந்திடப் புன்னகை தூற்போம் ! - புகழ்
மார்க்கம் அறிந்தனம் வாட்டம் நமக்கில்லை
மானுடம் வாழ்கென ஆர்ப்பரிப்போம் !
-விவேக்பாரதி
30.01.2017
சந்திர னின்னுரு கண்டேன் - அதன்
சங்குவெள் ளைநிறம் கண்டேன் - இருள்
சாடும் குணத்தினைக் கண்டேன் - அதைச்
சார்ந்திங் கொளிர்விடும் வண்ணவிண் மீன்களைச்
சான்றெனப் பாவுக்கு மொண்டேனடி !
பக்க மிருந்திடும் யாவும் கருத்திடப்
பட்டப் பகல்மறைந் தாச்சு - எழில்
பற்றும் சிவப்பெழும் பூச்சு - இதில்
பாரினில் துன்பங்கள் போச்சு - அட
பார்க்கும் திசையெலாம் மக்கள் குவிந்தனர்
பாட்டுகள் ஆட்டங்க ளாச்சுதடி !
ஆடிய மாந்தரின் அன்பு முகத்தினில்
ஆண்டவன் வந்தனன் பாரீர் - இர
வாட்டம் தனில்வந்து சேரீர் ! - இதன்
ஆனந்தம் ஊருக்குக் கூறீர் ! - இந்த
அண்ட சராசரம் கண்டு குலுங்கிட
ஆட்டங்கள் ஆடுவம் வாரீரிங்கே !
ஓடின துன்பங்கள் ஒட்டின இன்பமென்
றோதித் தினந்தினம் பாடீர் ! - மிக
ஒய்யாரம் பொங்கிட ஆடீர் ! - சுடர்
ஒன்றித் திகழ்ந்திடக் கூடீர் ! - அதன்
ஒண்மையி லேபுதுத் திண்மையி லேமதி
ஒன்ற மனங்களை நாடிடுவீர் !
யாவரும் ஒன்றெனும் நல்ல சமத்துவம்
யாண்டும் நிலைத்திடச் செய்து - அதை
யாரும் மதித்திட நெய்து - மழை
யாவருக் காகவும் பெய்து - இனி
யாரும் தனியில்லை என்ற முழக்கங்கள்
யாவரின் நெஞ்சுளும் உய்திடட்டும்
மாவலி எய்தியிம் மண்ணினில் வாழ்ந்திட
மாபெரும் சூளுரை ஏற்போம் - பின்
மானிடர் எங்ஙணம் தோற்போம் ?? - களி
மாந்திடப் புன்னகை தூற்போம் ! - புகழ்
மார்க்கம் அறிந்தனம் வாட்டம் நமக்கில்லை
மானுடம் வாழ்கென ஆர்ப்பரிப்போம் !
-விவேக்பாரதி
30.01.2017