தேர்வு

தேர்வுகள் பலவிதம் !
தெரிந்தவை எதுவும்
வாழ்க்கைத் தேர்வில்
வினாக்கள் ஆவதில்லை !
கணிதம் என்பதைக்
கால்தடமாக்கிப் பார் !
கல்லும் முள்ளும்
கண்ணுக்குப் புலப்படும் !
அறிவியல் மெய்த்திறம்
கருவிகள் ஆகும்
தேர்வுக்காட்டை சீக்கிரம் கடந்து
வெற்றியின் நகரம்
விரைவில் பிடிப்பாய் !
விடாமுயற்சியின் நதிக்கரையில் !!!

-விவேக்பாரதி
04.05.2017

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

கவிதை ஆண்டாள் - 1

மாதங்களில் அவள் மார்கழி