நிலையாமை

கொண்ட வுயிரைக் கொடுமிகு காலனுங் கொண்டுசெல்வான்
கண்ட வுடலது காட்டில் தனியே கனன்றெரியும்
பண்டைய செல்வம் பலசெல வாற்றின் பறந்துவிடும் !
மண்ணி லெதுவும் நிரந்தர மில்லையெம் மானிடமே !

-விவேக்பாரதி
18.04.2017

Popular Posts