மந்திரம்
மந்திரம் பண்ணப்போறேன் - புதுசா
மந்திரம் பண்ணப்போறேன்
தந்திரம் எல்லாம் தடுக்கி விழுக
மந்திரம் பண்ணப்போறேன் !
சந்திரனப் புடிச்சுக் - கடிக்க
சப்பாத்தி ஆக்கப்போறேன் !
சாட்டை அடிகொடுத்து - மேகத்த
சாறு எடுக்கப்போறேன்
மந்திரி மன்னரெல்லாம் - பணிஞ்சிட
மந்திரம் பண்ணப்போறேன் !
மண்ணில் வெளிச்சம்வர - சூரியன
மச்சில் நிறுத்தப்போறேன் !
எந்திர மேதுமில்ல - வித்தயாம்
ஏதும் படிக்கவில்ல
எங்கேயும் கற்றதில்ல - எனக்கு
எவரும் சொல்லவில்ல !
மந்திரம் என்னதுன்னு - தெரிஞ்சிக்க
மனசில் ஆசையுண்டா ?
மந்திரந் தான்போடுவேன் - கவிதை
மட்டுந்தான் நான்பாடுவேன் !
அந்தக் கவிதையில - அருள
அள்ளிக் கொடுத்திடுவா !
ஆமந்த மாரியம்மா - எனக்கும்
ஆண விடுத்திடுவா !
உடனே மந்திரம் போட்டுடுவேன் !
ஆமா ! மந்திரம் போட்டுடுவேன் !
-விவேக்பாரதி
12.04.2017
மந்திரம் பண்ணப்போறேன்
தந்திரம் எல்லாம் தடுக்கி விழுக
மந்திரம் பண்ணப்போறேன் !
சந்திரனப் புடிச்சுக் - கடிக்க
சப்பாத்தி ஆக்கப்போறேன் !
சாட்டை அடிகொடுத்து - மேகத்த
சாறு எடுக்கப்போறேன்
மந்திரி மன்னரெல்லாம் - பணிஞ்சிட
மந்திரம் பண்ணப்போறேன் !
மண்ணில் வெளிச்சம்வர - சூரியன
மச்சில் நிறுத்தப்போறேன் !
எந்திர மேதுமில்ல - வித்தயாம்
ஏதும் படிக்கவில்ல
எங்கேயும் கற்றதில்ல - எனக்கு
எவரும் சொல்லவில்ல !
மந்திரம் என்னதுன்னு - தெரிஞ்சிக்க
மனசில் ஆசையுண்டா ?
மந்திரந் தான்போடுவேன் - கவிதை
மட்டுந்தான் நான்பாடுவேன் !
அந்தக் கவிதையில - அருள
அள்ளிக் கொடுத்திடுவா !
ஆமந்த மாரியம்மா - எனக்கும்
ஆண விடுத்திடுவா !
உடனே மந்திரம் போட்டுடுவேன் !
ஆமா ! மந்திரம் போட்டுடுவேன் !
-விவேக்பாரதி
12.04.2017
Comments
Post a Comment