பக்கம் இருப்பதில்

பக்கம் இருப்பதில் வெட்கமென்ன ? - அடி
   பஞ்சுக் கன்னம்தர அச்சமென்ன ?
சிக்கல் மனதுக்குள் நிற்பதென்ன - இரு
   ஜீவன் கலந்தபின் துக்கமென்ன ?

பட்டுத் தலையணை பக்கத்திலே - உடன்
   பாலும் பழங்களும் பக்கத்திலே
தொட்டுக் கொள்ளமட்டும் தூரமென்ன ? - அடி
   தோள்கள் இணைந்தபின் பாரமென்ன ?

மீனும் நிலவுமே பக்கத்திலே - அவை
   மீட்டும் இரவிசை பக்கத்திலே
நானும் கவிதையும் எட்டுவதோ ? - என்
   நங்கை தனிமையில் தட்டுவதோ ?

நீரும் தவளையும் பக்கத்திலே - அதில்
   நீந்தும் கயல்களும் பக்கத்திலே
தீரும் பொழுதுகள் செல்லுவதோ ? - நீ
   திண்ண மௌனத்தைச் சொல்லுவதோ ?

-விவேக்பாரதி
19.07.2017

Popular Posts