மலர் சிம்மாசனம்

Image may contain: drawing
ஓவியர் சுதன் அண்ணனின் இப்படத்திற்கு...

மலர்சிம்மா சனத்தினிலே மகிழ்வோட மர்ந்து
பலதுன்பம் போக்கவழி பகர்கின்ற வேந்தா !
கலிமுற்றும் இவ்வேளை காப்பாற்றி என்னை
உலகத்தில் உய்விக்க உன்னருளைத் தாதா !

செங்கோலாய் உன்கோலைச் சேவித்தி ருப்பேன்
தங்கநிறப் பாதத்தில் தமியேன்கி டப்பேன் !
அங்கமெலாம் புளகமுற உன்பார்வைக் காக
எங்கணுமே ஏங்கிடுவேன் எனக்கருளைத் தாதா !

அப்பப்பா உன்கிரீடம் அதிசுந்த்ர ரூபம் !
ஒப்பப்பா உனக்கந்த ஓங்காராத் தெய்வம்
தப்பப்பா நான்செய்தால் தளிரென்னைக் காப்பாய் !
உப்பப்பா உன்னருளும் ! உயிர்வாழத் தாதா!!

-விவேக்பாரதி
30.12.2016

Popular Posts