இந்த வாசனை
எப்போதுந் தோன்றுவ தில்லை - உயிர்
ஏறிய மர்ந்திடு மிந்தமண் வாசனை !!
குப்பெனக் காற்றினி லின்று - குளிர்
கொண்டடித் தெம்மன வாசலில் நின்று
இப்படிப் பாடிடச் செய்யும் - இது
இப்படி யேயின்னும் எவ்வள வுய்யும் ?
விண்ணின் துகள்களைத் தேடி - அந்த
விந்தை விழுந்திடும் நாளைக்கொண் டாடி
எண்ணமெ லாமகிழ் கின்றோம் - இதற்
கெத்தனை நாட்கள் தவங்கிடக் கின்றோம் !
ஈனமெ னும்வெயில் போச்சு - எங்கள்
இன்னல கன்றிட மாரிவந் தாச்சு
மோனத் துயில்களும் மாறி - உளம்
மொத்தமும் ஆடுது வானத்தி லேறி !
மண்ணையி யக்கிடு வீரே ! - அண்ட
மாயம் படைத்திடு நல்லிறை மாரே !
கண்விழித் தீர்மிக நன்றி - இனி
காடுகள் செய்வ மியற்கையோ டொன்றி !
- விவேக்பாரதி
22.04.2017
ஏறிய மர்ந்திடு மிந்தமண் வாசனை !!
குப்பெனக் காற்றினி லின்று - குளிர்
கொண்டடித் தெம்மன வாசலில் நின்று
இப்படிப் பாடிடச் செய்யும் - இது
இப்படி யேயின்னும் எவ்வள வுய்யும் ?
விண்ணின் துகள்களைத் தேடி - அந்த
விந்தை விழுந்திடும் நாளைக்கொண் டாடி
எண்ணமெ லாமகிழ் கின்றோம் - இதற்
கெத்தனை நாட்கள் தவங்கிடக் கின்றோம் !
ஈனமெ னும்வெயில் போச்சு - எங்கள்
இன்னல கன்றிட மாரிவந் தாச்சு
மோனத் துயில்களும் மாறி - உளம்
மொத்தமும் ஆடுது வானத்தி லேறி !
மண்ணையி யக்கிடு வீரே ! - அண்ட
மாயம் படைத்திடு நல்லிறை மாரே !
கண்விழித் தீர்மிக நன்றி - இனி
காடுகள் செய்வ மியற்கையோ டொன்றி !
- விவேக்பாரதி
22.04.2017
Comments
Post a Comment