வாழ்க்கை நிலை

காபி நெடியில்லா - தொரு
காலை எழவேண்டும் !
காதல் கிளிவந்தே - என்
கண்ணில் படவேண்டும் !
நாபிக் கமலத்தில் - பல
ராகம் எழவேண்டும் !
நாளும் காலையிலே - புதுக்
கவிதை விழவேண்டும் !

என்னை அவளதட்டி - இங்கு
எழுப்பி விடவேண்டும்
என்றன் உடம்பெல்லாம் - நிதம்
அவள் மணக்கவேண்டும் !
மின்னல் வேகத்தில் - அந்த
நாள் முடியவேண்டும் !
மீண்டும் வீடுவர - அவள்
காத்திருக்க வேண்டும் !

இரவின் ஆட்டங்கள் - அது
இசைக்கும் கீதங்கள்
இனிய பாட்டங்கள் - தரும்
இன்பத் தூட்டங்கள்
சிரமம் பார்க்காத - சில
சிறப்பு நேரங்கள்
வரம் எனவும் வேண்டும் - இப்படி
வாழ்க்கை நிலைவேண்டும் !

-விவேக்பாரதி
26.06.2017

Popular Posts