இளமை போற்றுதும்
"பொதிகை" தொலைக்காட்சி, சுதந்திர தின சிறப்புக் கவியரங்கில் கொடுக்கப்பட்ட தலைப்பு. இளமையைப் போற்றுதும் இளமையைப் போற்றுதும் ஈடிலா விசைகொள்வதால் - அவர் இன்றேநி னைத்ததை இன்றேமு டித்திடும் இயல்பான நசைகொள்வதால்! வளமையாம் பூட்டிற்குத் திறவுகோல் ஆகிடும் வன்மையைப் பெற்றசெயலால் - வரும் வாழ்வையொரு கடலாக்கி எதிர்நீச்சல் இட்டிடும் வடிவத்தை உற்றவினையால்! இளமையைப் போற்றுதும்! சுழல்கின்ற உலகத்தில் இருந்துவாழ் கின்றபுகழால்! - தினம் இவ்வுலகில் நிற்காதி யங்கிடும் யாவையும் இளையவை என்றவழகால்! தளைவீழ நெஞ்சத்தின் ஒளிசூழக் களிநேரத் தாகங்களைக் கொள்வதால்! - பெரும் தலையான சக்தியாம் இளமையைப் போற்றுதும் தரணியை அவர்வெல்வதால்! அச்சமில் லாதெழும் கன்றுகள் தாம்பின்னர் ஆக்கத்தின் உருவமாகும்! - ஒலி அடங்காமல் ஓடிடும் ஆற்றினுள் தாம்பாசி அமையாதி யக்கம்காணும் உச்சத்தைத் தொடுவதும் விழுவதும் எழுவதும் உணர்வுள்ள இளமையில்தான்! - மலை உயரத்தை யுஞ்சிறு கடுகெனக் கருதிடும் உயிரோட்டம் இளமையில்தான்! மெச்சும்ப ணம்புகழ் பாராட்டுக் கெந்நாளும்