இருப்பு

நெஞ்சம் இருப்பதனாலே, கவலை
எஞ்சி இருக்கிறது !

நினைவு நெருக்குவதாலே, அழுகை
மனத்தை நிறைக்கிறது !!

அச்சம் இருப்பதனாலே, ஐயம்
மிச்சம் இருக்கிறது !

ஆடிக் கிடப்பதனாலே, நேரம்
ஓடிச் சிரிக்கிறது !!

ஆவல் இருப்பதனாலே, ஆசைத்
தாவல் குதிக்கிறது !

நேரம் இருப்பதனாலே, உடலின்
பாரம் இருக்கிறது !!

வேலை இருப்பதனாலே, கடமை
வாலை அசைக்கிறது !

தவிப்பு சுவைப்பதனாலே, தினமும்
கவிதை பிறக்கிறது !!

-விவேக்பாரதி
02.08.2017

Comments

Popular Posts