ரக்‌ஷாபந்தன்

இன்னொரு தாயென்று வந்துதித்தாள் - அக்காள்
     இன்பச் சுகம் கொடுத்தாள்!
சின்னதோர் மகள்போல அவதரித்தாள் - தங்கை
     சிலிர்ப்பை நமக்கு அளித்தாள்!
அன்போடு விளையாடும் தோழியராய் - அவர்
     அகிலத்தைக் காட்டி நின்றார்!
கன்னலாம் அவருறவு கவினுறவே - அந்தக்
     காதலை வாழ்த்துகின்றேன்!!

-விவேக்பாரதி
07.08.2017
 

Comments

Popular Posts