புதுவெம்பாவை
நேரம் மறந்து நிகழ்வ தறியாமற்
சூரத் துயிலினுட் சுற்ற மிழப்பாயோ?
தீரக் கடவுள்! திரண்டந்தக் காவிரி
பாரதத்துப் பாயப் பணிசெய்த தெய்வதம்!
வீரிய வேழ வியன்முகத்தான்! உண்மையெனு
மாரண மாளு மறிவரசன் நாஞ்செய்யுங்
காரியம் யாவினுக்குங் காப்பாவா னன்னான்பேர்
நீரினி லாடி நினைத்திடுவோ மெம்பாவாய்!!
-விவேக்பாரதி
24.12.2017
Comments
Post a Comment