புதுவெம்பாவை

16)

நெற்றி யெழிலாளே!  நெஞ்சிழுக்கும் என்தோழி!
சிற்றிடை யாளே! சிரிக்கும் நகையாளே!
கற்றைச் சடையாளே! கண்விழிப்பாய்! வையத்தில்
கற்றோர் வியக்கும் கவிதை தனையெழுத
அற்றைப் பொழுதில் அமைந்தவெழுத் தாணியாய்
ஒற்றை மருப்பை ஒடித்த விநாயகனைப்
பற்றிப் புகழ்ந்தாலே பன்னலங்கள் தந்திடுவான்!
சற்றுநீ ராடிப்பா சாற்றிடுவோம் எம்பாவாய்!!

-விவேக்பாரதி
31.12.2017

Comments

பிரபலமான பதிவுகள்