பூசை நெருப்பு

இலந்தை ஐயா சொன்ன "பங்க்தி சந்தம்" என்ற சந்தத்தில் ஒரு வஞ்சித்துறை

பச்சை நிறத்தள்!
இச்சை யறுப்பள்!
மெச்சும் மனத்தின்
அச்சி லிருப்பள்!

கந்த னருள்வேல்
தந்த கரத்தள்!
தொந்தி மகன்தன்
சிந்தை நிறைப்பள்!

பாலும் புகட்டிச்
சூல மழுத்தி
ஜால மியற்றும்
ஆல நிறத்தள்!

ஈச னிடத்தில்
வாசம் நிகழ்த்தும்
நேச வுமைக்கென்
பூசை நெருப்பு!

சித்த மளிக்கும்
சக்தி உமைக்கே
பக்தி கவித்தேர்
மொத்த இருப்பு!

-விவேக்பாரதி
30.12.2017

Comments

பிரபலமான பதிவுகள்