புதுவெம்பாவை

10)

காற்று குளிர்கொடுக்கக், கன்று மொலிகொடுக்க,
நாற்று நடங்கொடுக்க, நாங்கள் குரல்கொடுக்க,
மாற்ற மிவைநின் மனத்தில் பதியாமற் 
சேற்றுமரை போலச் செழுந்துயிலு லாழ்வாயோ?
ஆற்ற லுடையபழ வாதிக் கதையெழுத
ஏற்ற மருப்புடைத்த ஏந்தல்! நமையணுகி
ஊற்றுக் கருணையினா லூறழிப்பான்! அன்னான்பேர்
ஆற்றுநீ ராடி அகத்துவைப்போ மெம்பாவாய்!!

-விவேக்பாரதி
25.12.2017

Comments

பிரபலமான பதிவுகள்