புதுவெம்பாவை
11)
கீச்சுங் கிளியுங் கிளரும் மயிலினமுங்
கூச்சக் குயிலுங் குரங்குங் காகமுங்
காய்ச்சப்பால் நல்குங் கறவைமுத லானினமும்
பேச்சற்ற மாக்களும் பேசும் மனிதர்போ
லாச்சர்ய மான அழகுடனே தும்பிக்கை
வீச்சுடைய நாதன் விநாயகனைப் பாடுகையில்
மூச்சிட்டு நீமட்டும் மோனத் திருப்பாயோ?
ஆய்ச்சியர்போல் நாமும் அகமகிழ்ந் தாண்டவன்பேர்
பாய்ச்சலுடை நீராடிப் பாடிடுவோ மெம்பாவாய்!!
-விவேக்பாரதி
26.12.2017
Comments
Post a Comment