புதுவெம்பாவை
15)
சாதகம் செய்து சரிந்தவர் போலிங்குக்
காதகம் கண்கள் கவினுடல் மூடிநீ
பாதகத் தூக்கத்தில் பாய்ந்து கிடப்பாயோ?
மோதகம் உண்டே முழுமை படைப்பவனைப்,
போதனை மௌனப் பொலிவில் தருபவனை,
நாதமொடு நாமும் நலமான சொல்லெடுத்துக்
கீதத்தால் பாடக் கிளர்ந்தருள்வான்! நாம்பாடிச்
சீதநீர் ஆடிச் சிலிர்த்திடுவோம் எம்பாவாய்!!
சாதகம் செய்து சரிந்தவர் போலிங்குக்
காதகம் கண்கள் கவினுடல் மூடிநீ
பாதகத் தூக்கத்தில் பாய்ந்து கிடப்பாயோ?
மோதகம் உண்டே முழுமை படைப்பவனைப்,
போதனை மௌனப் பொலிவில் தருபவனை,
நாதமொடு நாமும் நலமான சொல்லெடுத்துக்
கீதத்தால் பாடக் கிளர்ந்தருள்வான்! நாம்பாடிச்
சீதநீர் ஆடிச் சிலிர்த்திடுவோம் எம்பாவாய்!!
-விவேக்பாரதி
30.12.2017
30.12.2017
Comments
Post a Comment