மனமே நீ

என் தோழி சொன்ன,

"Nah.. No heart has any stupid feelings and memory and any job other than juz pumping blood...Brain is the culprit.. He does everything and blames heart for his safe play" 

என்னும் வார்த்தைகள் கிளர்த்திய கவிதை....


மூளையே நீ மனமா?
இதயமே நீ மனமா?
நெஞ்சமே நீ மனமா?
நாளும் இந்த அம்மனமா?

மனமே!
நீ இருக்கும் இடமெங்கே
நீளும் உன்றன் பதி எங்கே?
நீ வசிக்கும் இடமேது?
நிஜமா நிழலா பொருளேது?

ஒன்றை வேண்டும் இடமெல்லாம்,
இரண்டை மூன்றை விழைகின்றாய்!
நன்றைக் கருதும் இடமெல்லாம்,
நலிவைத் தேடி உழல்கின்றாய்!
குழப்பத்துள்ளே குதிக்கின்றாய்
குட்டிக் கரணம் அடிக்கின்றாய்
அழுத்தித் தள்ளி இழுக்கின்றாய்
அலங்காரங்கள் தரிக்கின்றாய்!

அட
மூளையே நீ மனமா?
இதயமே நீ மனமா?

சலனம் சத்தம் சங்கீதம்
சபலம் ஞானம் கவித்துவம்
சுலபமாகப் படைக்கின்றாய்
சுருதியை மட்டும் மறக்கின்றாய்!

உன்னால் தினமும் பெரும்பாடு
உமை போலப் போராட்டம்
இன்னல் துயரம் எக்களிப்பு
ஏன் மனமே உன் பொய்யிருப்பு??

மூளையே நீ மனமா?
இதயமே நீ மனமா?
நெஞ்சமே நீ மனமா?
நாளும் இந்த அம்மனமா??

-விவேக்பாரதி
15.12.2017

Comments

Popular Posts