துளி

ஒரு துளியேனும்
புன்னகை செய்,
ஓடி வந்து
உள்ளம் சொல்வேன்!

ஒரு துளியேனும்
இரக்கம் காட்டு,
ஒற்றை மனத்தில்
உன்னை வைப்பேன்!

ஒரு துளியேனும்
மழலை பேசு,
கவிதைத் தொகுப்பில்
இடத்தை வைப்பேன்!

ஒரு துளியேனும்
காதல் செய்,
உயிரை உனக்காய்
எழுதிக் கிழிப்பேன் !

ஒரு துளி ஒரு துளி
பலதுளி ஆகலாம்!
காதல் சமுத்திரம்
நம்மையே ஆளலாம் !

அதற்காக
ஒரே...ஒரே....ஒரே...
ஒரு துளியேனும்.......

-விவேக்பாரதி
13.08.2017

Comments

Popular Posts