புதுவெம்பாவை

17)

புத்தம் பொதுப்பொழுது பூத்ததுகாண்! நீயின்னும்
சித்தம் மயங்கிச் சிதையும் பழமையிலே
மொத்தமும் ஆழ்ந்து முழுநிலையும் மாறுமெனும்
பித்துள் கிடப்பாயோ? பேரிகைகள் கேட்டிலையோ?
முத்தமிழ் கேட்க முகிழ்ந்த பெருஞ்செவியன்
உத்தமி சக்தி உளம்நிறை செல்லமகன்
நித்தம் புகழிசைக்க நீண்ட துணையருள்வான்
சுத்தநீ ராடிச் சுகம்பெறுவோம் என்பாவாய்!!

-விவேக்பாரதி
01.01.2018

Comments

பிரபலமான பதிவுகள்