புதுவெம்பாவை

14)

மைக்கொண்ட கண்கள் மயங்கித் துயிலணையில்
பொய்கண்ட பெண்ணாய்ப் பொழுதைக் கழிப்பாயோ?
மெய்கண்ட சுத்தம் மிளிர்ந்திடவே நீராடி
நெய்கொண்ட பொங்கல் நிறைய சமைத்ததனை
வைகுண்ட வாசல் வழிவரும் மாலின்தங்
கைகொண்ட மைந்தன் கணபதியின் பேர்பாடிப்
பைக்கொண்டு சேர்கின்ற பக்தர் அனைவருக்கும்
தைக்கொண்ட மார்கழியில் தந்திடுவோம் எம்பாவாய்!!


-விவேக்பாரதி
29.12.2017

Comments

பிரபலமான பதிவுகள்