புதுவெம்பாவை

12)

மாயத் துயிலில் மதிமயங்கிப் போழ்திழந்து
சாயக் கனவுக்குள் சாய்வாயோ? முன்னொருநாள்
தாயருள் செய்தவினை தட்டாமல் செய்கையிலே
தீயுமிழ் கண்ணனமர் திண்ணமுடை நந்தியவர்
காயத்தான் லீலைகள் காட்டிய கணபதியை
வாயெடுத்துப் பாட வறுமையெலாந் தீர்த்தருள்வான்
தேயத்தார் தேறிடவும் தேவையெலாம் சேர்ந்திடவும்
பாயும்நீ ராடியதைப் பன்னிடுவோம் மெம்பாவாய்!!

-விவேக்பாரதி
27.12.2017

Comments

பிரபலமான பதிவுகள்