பொழியாதிரு

வானமே பொழியாதிரு - என்
   வாழ்க்கையில் நுழையாதிரு
ஞானமே கலையாதிரு - என் 
   நாட்களில் நிலையாயிரு !! 

வேகம் எடுத்து நகர்ந்திடும் வாழ்க்கை
சோகம் இன்பம் வருவது வேட்கை !!

நித்திரை போகும் நேரம் வரையில்
   நிஜத்தைத் தேடி நாம் அலைகின்றோம்
இத்தனை தூரம் அலைவதை எண்ணி
   இருப்பதை வேண்டிப் பறந்திருக் கின்றோம்!! (வானமே)

நெஞ்சம் போடும் வேஷங்கள் எல்லாம்
   நேரம் வந்தால் கலைந்திட வேண்டும்!!
அஞ்சும் பழக்கம் இனியெழ வேண்டாம்!
   ஆண்மை வேண்டும் அறிவுற வேண்டும்!! (வானமே)

-விவேக்பாரதி
16.08.2017

Comments

Popular Posts