புதுவெம்பாவை
8)
மாசி லுமையாள் மகனை, எதிர்நின்ற
ஈச னிதயத் திருப்பவனை, நேருமன
ஆசை யறுக்கு மரும்பொருளை நாமெண்ணிப்
பூசிக்க நெஞ்சிற் புதுத்தெம்பு முற்சாக
வாசனையுந் தோன்றும்! வலுமருப்பன் நம்வீதி
வாசலிலே வந்து வனப்பருள்வான்! நெஞ்சத்து
நேசக் கலம நினைவலையின் சொல்கொண்டே
ஓசைக் கவிபாடி ஓங்கிடுவோ மெம்பாவாய்!!
-விவேக்பாரதி
23.12.2017
Comments
Post a Comment