Posts

Showing posts from 2018

அம்பலத்தாடும் ஆதிசிவன்

Image
  அம்பலத் தாடும் ஆதி சிவனின் அடிமை ஆனோமே, கும்பிட்டுக் குறையின் மலைகள் கடந்து கோவில் ஆனோமே! நம்புதல் என்னும் வேத வழியை நாம் தொடர்ந்தோமே! தம்பட்டம் இன்றி இறைவன் பாதம் தமையுங் கண்டோமே! நமக்குள் அவனே நடிப்ப தென்னும் நாடகத்தை உணர்ந்த பின்னும் நமது நமதென ஆடும் நிலையென்ன? நல்ல ஒளி முன் இருளின் குளிரென்ன? சுமக்கும் இறைவன் சுடரும் தலைவன் சூட்சுமங்கள் அவிழ்க்கும் ஒருவன் தமது தாளைச் சரண் புகுந்தாலே தர்க்கம் இல்லை இந்த மண்மேலே! தீயின் விழி முன் தீப நெஞ்சின் தீயை யெரித்து திசையை விரித்து வாயில் காற்றாய் வாழ்ந்திருந்தாலே வாட்டும் காயம் நீங்கும் தன்னாலே! தாயின் மனமாய்த் தலைவன் வருவான் தமிழை அருள்வான் தரணி வளர்ப்பான் காயும் மனத்தைக் கனிய வைப்பானே கண்களுக்குள் தெளிவைத் தைப்பானே! நந்தி யாக நெஞ்சை வைத்து நமது தலைவன் ஏறும் நாளை சிந்தை செய்து காத்திருந்தாலே சிவனின் பாதம் பதியும் நம்மேலே பந்தம் சிவமே சொந்தம் சிவனே பாடம் சிவனே பாடல் சிவனே முந்திப் பிந்தும் எண்ணம் சிவன் தானே மூர்க்கம் அன்பு யாவும் அவன் தானே!! -விவேக்பாரதி 20.12.2018

இன்ப நிலாவே

Image
 இன்னும்விலக வில்லைஎன்ன இன்ப நிலாவே! - நீ    இரவில்நீட்டும் சேதிஎன்ன இன்ப நிலாவே? மின்னுகின்ற ஒளியணுக்குள் இன்ப நிலாவே - நான்    மீட்டுகின்ற கவிதைவாங்கு இன்ப நிலாவே! முகிலினத்தின் பெருவிரிப்பில் இன்ப நிலாவே - நம்    முயற்சியாவும் தோன்றுமென்று சொல்லு நிலாவே அகவெளிக்குள் அண்டதுண்டம் இன்ப நிலாவே - வந்    தவதரிக்கும் என்றும்சொல்லு இன்ப நிலாவே சுகநினைப்பில் ஒலித்தெரிப்பில் இன்ப நிலாவே - உன்     சுருதிகேட்டு பாடவந்தேன் இன்ப நிலாவே மிகப்பொருத்தம் உன்றன்மௌனம் இன்ப நிலாவே - நெஞ்சில்     மின்னலான கவிதைகேளு இன்ப நிலாவே! எனைப்படைத்தும் உனைப்படைத்தும் ஒருவன் ஆடுவான் - அவன்    எழுதுகின்ற காட்சிக்குள்ளே நாமும் வாழுவோம் மனம்படைத்து மதிபடைத்துச் சண்டை மூட்டுவான் - அதில்    மாறிமாறி தேறிநாறி நாமும் வீழுவோம் சினம்படைத்த காரணத்தில் மனிதர் வாடுவார் - அதன்    சீற்றம்நீக்க மாற்றமாக்கத் தவங்கள் செய்யுவோம் இனம்படைத்த உங்களுக்குள் இவையும் இல்லையே - இன்னும்     என்னசேதி சொல்லவந்தாய் இன்ப நிலாவே!! -விவேக்பாரதி 20.12.2018

நண்பன் வைத்தீஸ்வருக்குப் பிறந்தநாள்

Image
மலருக்குக் காம்பாக, தாம ரைகள்     மலர்கின்ற நீராக, விடியும் காலைப் புலர்வுக்குப் பனியாக, விடிந்த பின்னே     புத்துணர்வு தருகின்ற ஞாயி றாக, சிலநேரம் மனமாக, பலநே ரங்கள்     சிறப்பான தோளாக எனக்கு வாய்க்க உலகுக்குள் தான்தோன்றி நின்ற உன்னை     உயிர்கொண்ட தமிழாலே வாழ்த்து கின்றேன்! நீவேறு நான்வேறு பிரித்துப் பார்ப்பார்     நிழல்வேறு குளிர்வேறு என்றா தோன்றும்? பூவேறு மணம்வேறென் றாவ துண்டோ?     புகழ்வேறு பணம்வேறு பிரித்தல் உண்டோ? போய்வேறு திசைபுகுந்து கிடக்கும் போதும்     புத்தியிலே எனையென்றும் பிரியா நண்பா நாவேறும் செந்தமிழின் கவிதை கொண்டு     நல்லதொரு வாக்குடனே வாழ்த்து கின்றேன்! கவியுள்ளம் அரியதுதான் ஆனால் இந்தக்     கவியுள்ளம் சொல்கின்ற தெல்லாம் கேட்கும் செவியுள்ள நண்பர்கள் அரிது கண்டாய்     சேர்ந்தாய்நீ அவ்வாறு வரமாய் வந்தாய்! தவமென்று தமிழ்க்கவிதை பாடும் நேரம்     தட்டாமல் கொட்டாமல் நீ ரசிப்பாய்! தவறென்றும் தள்ளென்றும் சொல்வார்க் கூடே     தமிழ்கேட்கும் நின்னையான் வாழ்த்து கின்றேன்! வெண்பாக்கள் செய்யுட்கள் பழக்க மில்லை     வெறும்வீச்சுக் கவிதைக

நண்பன் வைத்தீஸ்வருக்குப் பிறந்தநாள்

Image
மலருக்குக் காம்பாக, தாம ரைகள்     மலர்கின்ற நீராக, விடியும் காலைப் புலர்வுக்குப் பனியாக, விடிந்த பின்னே     புத்துணர்வு தருகின்ற ஞாயி றாக, சிலநேரம் மனமாக, பலநே ரங்கள்     சிறப்பான தோளாக எனக்கு வாய்க்க உலகுக்குள் தான்தோன்றி நின்ற உன்னை     உயிர்கொண்ட தமிழாலே வாழ்த்து கின்றேன்! நீவேறு நான்வேறு பிரித்துப் பார்ப்பார்     நிழல்வேறு குளிர்வேறு என்றா தோன்றும்? பூவேறு மணம்வேறென் றாவ துண்டோ?     புகழ்வேறு பணம்வேறு பிரித்தல் உண்டோ? போய்வேறு திசைபுகுந்து கிடக்கும் போதும்     புத்தியிலே எனையென்றும் பிரியா நண்பா நாவேறும் செந்தமிழின் கவிதை கொண்டு     நல்லதொரு வாக்குடனே வாழ்த்து கின்றேன்! கவியுள்ளம் அரியதுதான் ஆனால் இந்தக்     கவியுள்ளம் சொல்கின்ற தெல்லாம் கேட்கும் செவியுள்ள நண்பர்கள் அரிது கண்டாய்     சேர்ந்தாய்நீ அவ்வாறு வரமாய் வந்தாய்! தவமென்று தமிழ்க்கவிதை பாடும் நேரம்     தட்டாமல் கொட்டாமல் நீ ரசிப்பாய்! தவறென்றும் தள்ளென்றும் சொல்வார்க் கூடே     தமிழ்கேட்கும் நின்னையான் வாழ்த்து கின்றேன்! வெண்பாக்கள் செய்யுட்கள் பழக்க மில்லை     வெறும்வீச

பாரதியார் திருநாள்

Image
  பாரதி யார்திரு நாளினைத்தான் இந்தப்     பாருக்குள் எப்படிப் போற்றிகிறார்? காரணம் என்னென்ன சாற்றுகிறார்? எனக்     கண்டுகொள்வோம் சற்று வாருங்களேன்! எங்கள் மகாகவி வந்துவிட் டானென்     றெழுத்துலகம் மிக ஆர்ப்பரிக்கும் சிங்கக் குரலொன்று வந்தததென்றே யிசைச்     சிந்தனையர் மிகத் துள்ளிநின்றார்! எங்கள் இனத்தவன் வந்துவிட் டானெமை     ஏற்றிவைப்பான் மிகப் போற்றிவைப்பான் கங்கு விழியினில் காதலுளான் எனக்     காக்கை குருவிகள் பாடினவே! ஞானக் களஞ்சியம் வந்துவிட்டான் இனி     நன்மைவரும் மன வன்மைவரும் ஈனப் புலைத்தொழில் ஏகிவிடும் என     இங்குள யோகிகள் கோஷமிட்டார் ஆன வரைக்கும் அடிமைப்பட்டோம் இன்னும்     அச்சமில்லை ஒன்றும் மிச்சமில்லை சேனைப் படையொன்று வந்ததென்றே குலச்     சேர்ப்பிழந்தோரெலாம் ஆர்த்தெழுந்தார்! தென்னை மரங்கள் சிலுப்பினவே, தம்மைத்     தேடி யிசைப்பவன் வந்ததனால்! முன்னை உயர்நெறி வேதங்கள்தாம் ஒளிர்     முத்தெனத் தோன்றி ஜொலித்தனவே மன்னும் அமுத மலர்தொடுத்தே எனை     மாலை மழையில் நனைப்பனென்றே அன்னை தமிழ்மிக ஆடிவந்தாள், நல்ல     ஆனந்தத் தாலாட்டு பாடிவந்த

பாரதியார் திருநாள்

Image
  பாரதி யார்திரு நாளினைத்தான் இந்தப்     பாருக்குள் எப்படிப் போற்றிகிறார்? காரணம் என்னென்ன சாற்றுகிறார்? எனக்     கண்டுகொள்வோம் சற்று வாருங்களேன்! எங்கள் மகாகவி வந்துவிட் டானென்     றெழுத்துலகம் மிக ஆர்ப்பரிக்கும் சிங்கக் குரலொன்று வந்தததென்றே யிசைச்     சிந்தனையர் மிகத் துள்ளிநின்றார்! எங்கள் இனத்தவன் வந்துவிட் டானெமை     ஏற்றிவைப்பான் மிகப் போற்றிவைப்பான் கங்கு விழியினில் காதலுளான் எனக்     காக்கை குருவிகள் பாடினவே! ஞானக் களஞ்சியம் வந்துவிட்டான் இனி     நன்மைவரும் மன வன்மைவரும் ஈனப் புலைத்தொழில் ஏகிவிடும் என     இங்குள யோகிகள் கோஷமிட்டார் ஆன வரைக்கும் அடிமைப்பட்டோம் இன்னும்     அச்சமில்லை ஒன்றும் மிச்சமில்லை சேனைப் படையொன்று வந்ததென்றே குலச்     சேர்ப்பிழந்தோரெலாம் ஆர்த்தெழுந்தார்! தென்னை மரங்கள் சிலுப்பினவே, தம்மைத்     தேடி யிசைப்பவன் வந்ததனால்! முன்னை உயர்நெறி வேதங்கள்தாம் ஒளிர்     முத்தெனத் தோன்றி ஜொலித்தனவே மன்னும் அமுத மலர்தொடுத்தே எனை     மாலை மழையில் நனைப்பனென்றே அன்னை தமிழ்மிக ஆடிவந்தாள், நல்ல     ஆனந்தத் த

வீர சுதந்திரம் கலைக்காட்சி

வீர சுதந்திர வேள்வியால் - வந்த     வீணரை வென்று விரட்டிய - எங்கள் பாரதரின் புகழ் கேட்கவே - இந்தப்     பாரதி திருவிழா வாருங்கள்! - பல காரணமான கதைகளும் - நல்ல     காவியம் போன்ற வடிவுடன் - நன்கு வேர்விட்டிருக்கிற ஆலென - இங்கு     விரிந்து வளர்ந்ததைப் பாருங்கள்! வாசலில் பாரதத் தாய்முகம் - உள்ளே     வலிமையர் வீரர் அறிமுகம் - இந்தப் பூசைக்குப் பூக்கொண்டு வாருங்கள் - தொழும்     புண்ணியர் கூட்டத்தில் சேருங்கள் - தங்கள் ஆசையென்றே நம் விடுதலை - தனை     யாசித்த தியா உயிர்களின் - உயிர் ஓசைகளாம் வந்தே மாதரம் - அதை     உரக்க சொல்லியே வாருங்கள்! கடலுக்குப் பக்கத்தில் மணிவிழா - அட     கலைவாணர் அரங்கத் திருவிழா உடலுக்குள் இந்தியர் என்கிற - வீர     உதிரம் கொதிக்க வைக்கும்விழா - அலை கடலென நீரிங்கு வாருங்கள் - நம்     கடமை இதுவெனக் கூறுங்கள்! - பெரும் வடமொன்று கையில் தருகிறோம் - தேர்     வந்தது சேர்ந்திழுத் தாடுங்கள்!! -விவேக்பாரதி 08.12.2018

செல்லம்மா பாரதி

Image
முண்டாசுக் கவிப்புயலை இசையாய்ச் செய்த     மூங்கிலுக்கா முக்காடு போட்ட கோலம்? பெண்டிர்க்கு விடுதலையை இசைத்துச் சென்ற     பேராசைக் காரன்மனை விக்கா கோரம்? குண்டாட்டம் தீமைகளைத் துளைத்தோன் தம்மைக்     கொண்டபெரும் பீரங்கிக்கா இத்துன்பம்? அண்டிவந்த பொய்மூடத் தனமாம் பேயை     அணிந்தபடி வீழ்கின்ற உலகத் தீரே!! - விவேக்பாரதி  05.12.2018

செல்லம்மாள் பாரதிக்கா??

நான் வீதிப் பாடகன்

நான் வீதிப் பாடகன் ஓர் வினையிலாதவன் தேருலவும் வீதிகளின் ஓரங்களில் வாழ்பவன்!  காற்றோடு பாட்டாகிச் சூழ்கின்றவன் நேற்றோடும் உறவின்றி போகின்றவன்! நாளைகளை நினையாமல் இன்றோடு வாழ்கின்றவன்.... மனமென்னும் குரங்கின் விளையாட்டில் மகிழ்ந்து மலராகிச் சருகாகி வீழ்கின்றவன்! தினமும் ஒரு கோலம் கணம்நூறு பாடல் திரளாகித் துகளாகிப் போகின்றவன்! இல்லாமை என்னிடம் இல்லையே இழப்பதற் கெனதேதும் இல்லையே! (நான்) ஆனந்த வாழ்க்கை அனுபவங்கள் சேர்க்கை அகலாகிப் புகையாகும் என் நாட்களே ஞானத்தின் வேட்கை நாள்தேடும் யாக்கை நான்சொல்லும் பாடல்கள் யுகப் பூக்களே! தீபத்தின் தியானத்தில் சந்நிதி திரியாக நான்வாழும் நிம்மதி! (நான்) என்னோடு வானம் என்மீது மீன்கள் என்மூச்சு புயல் காற்று கவிதை அலைகள்! மின்னோடு நெஞ்சம் உரசாதிருந்தால் மிளிராது நான்பாடும் சொல்லின் மலைகள்! யாருக்கும் நான்பாடவில்லையே பாடமால் என் வாழ்க்கை இல்லையே! (நான்) -விவேக்பாரதி 24/11/2018 பாடல்  

வருக! நமஹ!

Image
துள்ளும் அழகுடன் வெள்ளித் திருச்சபை     தோன்றும் இறையவன் வருக! - எம் துன்பக் கவலைகள் நிந்தைத் திவலைகள்     தூரத்தில் சென்றனை விலக! அள்ளி விடத்தினை உண்ட பெருமகன்     அன்பர் மனத்தினில் வருக - அவன் ஆட்டம் தனைக்கண்டு நாட்டம் மிகக்கொண்டு     ஆழ்மனத் தேயிசை எழுக! கொள்ளை யிருளினில் நல்ல நடமிடும்     கோனவன் கண்முன்பு வருக - மதிக் கொண்டை குலுங்கிடச் செண்டை முழங்கிடக்     கூத்திடும் நாயகன் வருக! பிள்ளை அழைப்பதைக் கண்டு சிவனுடன்     பிஞ்சு நிலவொடு வருக! - அந்த பிரம்மன் முதலிய தேவர் வணங்கிடும்     பிரணவப் பொருளனே நமஹ! (1) வாழ்வுக் கடலினில் வாட்டப் புயல்களை     வந்து தணித்திட வேண்டும் - எனை வண்ண மிலாதவோர் வானச் சிலையென     வாரி அணைத்திட வேண்டும்! ஏழ்மைத் துயரினை எட்டி மிதித்தருள்      ஏகாந் தம்தர வேண்டும்! - யான் எழுதும் கவிதையில் முழுதும் பொருளுடன்     ஏறி அமர்ந்திட வேண்டும் தாழ்வுற் றழுதிடும் என்றன் உயிரினில்     தண்மை அருள்தர வேண்டும் - எங்கள் தலைவன் பதநிழல் கவலைக் கொருதழல்     தாபம் பொசுக்கிட வேண்டும்! ஆழ்ந்த மனத்தினில் அன்பை விதைத்தெனை    

வருக! நமஹ!

Image
துள்ளும் அழகுடன் வெள்ளித் திருச்சபை     தோன்றும் இறையவன் வருக! - எம் துன்பக் கவலைகள் நிந்தைத் திவலைகள்     தூரத்தில் சென்றனை விலக! அள்ளி விடத்தினை உண்ட பெருமகன்     அன்பர் மனத்தினில் வருக - அவன் ஆட்டம் தனைக்கண்டு நாட்டம் மிகக்கொண்டு     ஆழ்மனத் தேயிசை எழுக! கொள்ளை யிருளினில் நல்ல நடமிடும்     கோனவன் கண்முன்பு வருக - மதிக் கொண்டை குலுங்கிடச் செண்டை முழங்கிடக்     கூத்திடும் நாயகன் வருக! பிள்ளை அழைப்பதைக் கண்டு சிவனுடன்     பிஞ்சு நிலவொடு வருக! - அந்த பிரம்மன் முதலிய தேவர் வணங்கிடும்     பிரணவப் பொருளனே நமஹ! (1) வாழ்வுக் கடலினில் வாட்டப் புயல்களை     வந்து தணித்திட வேண்டும் - எனை வண்ண மிலாதவோர் வானச் சிலையென     வாரி அணைத்திட வேண்டும்! ஏழ்மைத் துயரினை எட்டி மிதித்தருள்      ஏகாந் தம்தர வேண்டும்! - யான் எழுதும் கவிதையில் முழுதும் பொருளுடன்     ஏறி அமர்ந்திட வேண்டும் தாழ்வுற் றழுதிடும் என்றன் உயிரினில்     தண்மை அருள்தர வேண்டும் - எங்கள் தலைவன் பதநிழல் கவலைக் கொருதழல்     தாபம் பொசுக்கிட வேண்டும்! ஆழ்ந்த மனத்தினில் அன்பை விதைத்த

மனத்திடம் அறிவுரை

மனமே ஓ மனமே - நீ    மருளுவதேன் தினமே? கனவே வெறும் கனவே  - இந்தக்     காலம் சில கணமே! காற்றினில் தீயை நாமெரித்தாலும்     காற்றுக்கு வலிப்பதில்லை , கதிரவன் நிலவைச் சுடுவதென்றாலும்     கவலைப் படுவதில்லை, காற்றாய் நிலவாய் நாமிருந்தாலே     காலம் கசப்பதில்லை, கவனம் இகழ்ச்சி ஏமாற்றங்கள்     காயம் கொடுப்பதில்லை! நாமுண்டு நமக்கு பிறகென்ன கணக்கு     நாளும் ஆனந்தம்! நடித்திட வேண்டா நகர்ந்திட வேண்டா     நடக்கும் ராஜாங்கம்! வானுக்கு மேலே வெடிவெடித்தாலும்     வானம் கிழிவதில்லை! வழியினில் நூறு சரிவிருந்தாலும்     வாழ்க்கை அழிவதில்லை! வருவது கோடி பெறுவது கோடி     வளையா திருந்துவிடு! வாட்டம் வந்தாலும் ஓட்டம் விடாமல்     வழியை நினைந்துவிடு! தருவதும் ஒருவன் தலைமகன் இறைவன்     தற்செயல் ஏதுமில்லை, தானெனுன் நம்மை நாமழித்தாலே     தர்க்கம் தொடர்வதில்லை!! -விவேக்பாரதி 11.11.2018

கங்கை கண்ட கவி

Image
கட்டளைக் கலித்துறைக் கவியரங்கம் விநாயகர் துதி   கட்டளை யிட்டுக் கவியெழு தென்ற கவிஞரிடம்   தட்டா துடனே தனதொரு தந்தம் தனையுடைத்து   விட்ட யிடத்தை விரைவி லெழுது விநாயகனே   குட்டிக் கவிஞன் குறிக்கும் கதையில் குறையகற்றே !  ஸ்ரீதர ஐயாவாள் கதை   திருவிசை   நல்லூர்   திருநக   ரில்பொ ற்  றி ருச்சடையர்   உருவரு   வாகும் உடையவர் மீதே  உளமுருகித்   தெருவினில்   பாடல்   திரட்டு   படைக் குந்   திறமையுடை   ஒருவ ரி ருந்தார்   உயர்ஶ்ரீ   தரனெனும்   உ ண்மையரே ! (1) சிவன்புகழ் பாடும்   தொழிலுடை யார்!பசிச் சீற்றமெனும்    அவமது நீக்க அடுப்பெறிப் பார்!வரும் அன்பருக்குச்  செவியும் வயிற்றையும் சேர்த்து நிறைக்கும் திருத்தொழிலே    சிவத்தொழி லென்று  செலுத்திவந் தார்தன்   சிரத்தையையே ! (2) ஊரார்   புகழ   உலகோர்   புகழ   உறுதியு டன்   பேரார்ந் திருந்த பெரியவர் செல்வம் பெரிதிழைத்துத்   தாரா ளமெனத் தணித்தார் பசிப்பிணி! தம்செயலால் நேரா யிறையவன் நெஞ்ச மடைந்தார் நிகழ்வினிலே! (3) ஐயர் பொறுமைக் களவையும் பக்தியின் ஆழத்தையும்  மெய்யாய்க் கணிக்க மெலிதாய் யொருசிறு நாடகத்தை  உய்வாய் எனச்சிவன் உள்ளத் தொருநினை

கங்கை கண்ட கவி

Image
கட்டளைக் கலித்துறைக் கவியரங்கம் விநாயகர் துதி   கட்டளை யிட்டுக் கவியெழு தென்ற கவிஞரிடம்   தட்டா துடனே தனதொரு தந்தம் தனையுடைத்து   விட்ட யிடத்தை விரைவி லெழுது விநாயகனே   குட்டிக் கவிஞன் குறிக்கும் கதையில் குறையகற்றே !  ஸ்ரீதர ஐயாவாள் கதை   திருவிசை   நல்லூர்   திருநக   ரில்பொ ற்  றி ருச்சடையர்   உருவரு   வாகும் உடையவர் மீதே  உளமுருகித்   தெருவினில்   பாடல்   திரட்டு   படைக் குந்   திறமையுடை   ஒருவ ரி ருந்தார்   உயர்ஶ்ரீ   தரனெனும்   உ ண்மையரே ! (1) சிவன்புகழ் பாடும்   தொழிலுடை யார்!பசிச் சீற்றமெனும்    அவமது நீக்க அடுப்பெறிப் பார்!வரும் அன்பருக்குச்  செவியும் வயிற்றையும் சேர்த்து நிறைக்கும் திருத்தொழிலே    சிவத்தொழி லென்று  செலுத்திவந் தார்தன்   சிரத்தையையே ! (2) ஊரார்   புகழ   உலகோர்   புகழ   உறுதியு டன்   பேரார்ந் திருந்த பெரியவர் செல்வம் பெரிதிழைத்துத்   தாரா ளமெனத் தணித்தார் பசிப்பிணி! தம்செயலால் நேரா யிறையவன் நெஞ்ச மடைந்தார் நிகழ்வினிலே! (3) ஐயர் பொறுமைக் களவையும் பக்தியின் ஆழத

குற்றால குதூகலம்

Image
குற்றால அருவியில் முதன்முறை குளித்தபோது, அதைக் கண்டு வியந்து தண்ணீரின் சத்தத்துதோடே உரக்கச் சொன்ன கவிதை.  படிப்படியாய்த் தண்ணீர்;  பளிங்குபோலத் தண்ணீர்  பரம்பொருளே நீர்வடிவில்  பாய்ந்தணைத்த தண்ணீர்!   குடங்குடமாய்த் தண்ணீர்;  குன்று பாய்ச்சும் தண்ணீர்  கொட்டிக்கொட்டி உடல்முழுக்கக்  குளிர்கொடுக்கும் தண்ணீர்!   எடுக்கவெடுக்கத் தன்ணீர்;  இன்பமான தண்ணீர்;  எழுதிவைத்த ஓவியமாய்  ஏறிவிழும் தண்ணீர்;   விடியலெனப் பெருகி  விலங்குபோடும் அருவி,   விளையாடிப் பார்க்கையிலே  உள்ளமாகும் குருவி!! –விவேக்பாரதி  18.11.2018

அவன் பதத்திற்குக் கீழே

Image
 அவன் பதத்திற்குக் கீழே - இந்த     அண்ட பகிரண்டம் சுழலும் தவம் முயல்வார்க்குள் எல்லாம் - இந்தத்     தலைவன் பாதமே தெரியும்! சிவனும் குருவென்னும் வேலன் - சின்னச்     சிரிப்பு சிரிக்குமணு கூலன் கவலை இனியில்லை நெஞ்சே - கந்தன்     கழல்கள் உண்டெதற்கும் அஞ்சேல்! வள்ளி தெய்வானை யோடு - வீதி     வலமும் வருகின்ற போது உள்ளம் எங்குமவன் காட்சி - எந்த     உயிரின் உள்ளுமிவன் ஆட்சி கள்ளம் இல்லாத நெஞ்சில் - இந்தக்     கந்தன் வாழுவது திண்ணம் வெள்ளம் இவன்வார்க்கும் கண்ணீர் - துன்ப     வெம்மை தணிந்துயரும் எண்ணம்! வேலும் உண்டுநமைக் காக்க - இந்த     வேந்தன் உண்டுநலம் சேர்க்கக் காலன் எதிர்நிற்கும் போதும் - சொல்லக்     கந்தன் பேருண்டு போதும்! ஞாலம் காக்கவரும் வேலன் - தமிழ்     ஞானி யர்க்குதவு சீலன் கோலத்தில் சின்ன பாலன் - கந்தன்     கொல்லும் கயமைக்குக் காலன்! -விவேக்பாரதி 12.10.2018

பாரதி கானா

Image
ஹே!  பாரதியே பொறந்து வந்தான் நம்ம நாட்டுல அவன் பாட்டு சத்தம் கேட்டுது பார் நடு ரோட்டுல சூடு பறக்க வந்த அந்த அதிர் வேட்டுல வெள்ளையன் சுருட்டிக்கிட்டு ஓடிப்புட்டான் மிட் நைட்டுல முண்டாசு கவிஞன் பாரதி - அவன் மீச முறுக்கி நின்ன தீப்பொறி சொறன இல்லாம சுருண்டு கெடந்த மனுசன எழுப்பப் பாடுனான் சிங்கம் போல கர்ஜன பதிச்சி நடந்தானே மண்ணு மேட்டுல பாட்டு தானே சோறு அவன் வூட்டுல ஆத்தா சக்திய பக்கத்துல பாத்தவன் இந்திய தேவிய சொதந்திரமா நெனச்சவன் பேனா எடுத்தானே துப்பாக்கி பறக்க இனிமேல் இவன்போல யார்வந்து பொறக்க!! -விவேக்பாரதி 05.11.2018

வெடியற்ற விடியல்

Image
image courtesy :http://static.dnaindia.com/sites/default/files/2014/10/21/276983-diwali-10.jpg  வெடியற்ற விடியலைக் காணவேண்டும் - மண்ணின்    வேதனை கூடாதிருக்க வேண்டும் - கோர இடியற்ற திருநாளைக் காணவேண்டும்! - அன்று     இன்பமே வரமாய்க் கிடைக்கவேண்டும்! - நொந்து மிடியுற்ற தாய்பூமி மோட்சம்பெற - அசுரன்    மிரட்சியைக் கொன்றநாள் தீபாவளி - அன்று விடியட்டும் நல்வாழ்த்தும் உற்சாகமும் - நம்மை    விலகட்டும் பொய்ப்புகை பிறதூசுகள்! குப்பைகள் புகைகளும் அலங்காரமோ? - நிலம்    கொடுத்ததற் கேதரும் பரிகாரமோ? - இதனைத் தப்பென்று தெளியாமல் வாழ்கின்றதால் - நம்மைத்    தரிகெட்ட கரியபுகை சூழ்கின்றதே! - தேவை முப்போதும் நெருக்கிடப் புகைவாகனம் - விட்டு    முந்திடுங் குதிரைகள் போலோடுவோம் - பல குப்பைக்கு மத்தியில் உயர்கோபுரம் - கட்டி    கோடிகள் பெற்றதாய் நாம்பாடுவோம்! விடுமுறை நாளிலும் வெடிமாசினால் - புவி    விக்கிட வைப்பதோர் விளையாடலோ? - வளம் தடுத்திடும் செய்கைக்குப் பல்லாயிரம் - இங்கு    செலவுகள் செய்வதோர் அறிவாண்மையோ? - வையம் அடுப்பெனப் புகையோடு நெருப்பைத்தர - அதனை    ஆனந்தம் ஆனந்தம் எனச்சொல்வமோ? - இதை விடுத்துயர் வ