காளிக்கு வினா
எந்த நினைப்பினில் இந்தப் புவிதனை எழுதிவைத்தாய் காளி? - உனக் கிந்தப் புவிபடும் இன்னல் குரல்செவி எட்டுதுவோ காளி? தந்தை சிவனுடன் தக்க இடத்தினில் தங்கிவிட்டாய் காளி! - உனைச் சிந்தை நிறைந்திடும் சின்னவன் கேட்கிறேன் சீக்கிரம் சொல்காளி! ஊரி லொருபுறம் ஊமைப் புகைவந்து உயிரைக் கேட்கிறது - ஒரு காரண மின்றி கண்கள் எரியுறக் காட்சி கலைகிறது! போரி லிறந்தவர் போலப் பிணியினில் போகு முயிர்கோடி - இவை யாரு முனதெழிற் காதில் முனம்வந்து யாத்தனரோ காளி? நெஞ்ச மொருபுறம் நெளியும் கனவினை நிகழ்ந்தி வைக்கிறது - அதைக் கொஞ்சம் பிடித்திடக் கோல மதிசெயும் கூத்து வலிக்கிறது! தஞ்ச மடைந்திட நாதி இலாமலே தாரணி தோற்கிறது - கொடும் நெஞ்சை நிகர்க்குமெம் வாழ்க்கை வேறெங்கும் நிகழ்ந்திடுமோ காளி? காதில் பொய்ப்புகழ் ஏறிக் கிளர்த்திடக் கல்லென மாறினையோ? - சுகப் போதென் றிதையெணிப் போகம் அழைத்திடப் போந்தனையோ காளி? வாதை அடைந்திடும் பிள்ளை யழுகுரல் வாட்டம் தணிகவென்றே - வரும் சூதைத் தடுத்திடும் சூட்டை அடைவதில் சோம்பலும் என் காளி? நம்பிக் கிடப்பவர் நல்ல மனத்தினில் நன்மை விதைத்துவிடு - தினம் வெம