உயிர்ப்பு

மழை பொழிந்ததால் உயிர்கள் வந்தன
உயிர் விரிந்ததால் உடல்கள் வந்தன
உடல் வளர்ந்ததால் விலங்குகள் பிரிந்தன
பிரிவு நேர்ந்ததால் உணர்வு வந்தது
உணர்வு கண்டதால் அறிவு வந்தது
அறிவின் ஆழமே பகுத்துக் கொண்டது
பகுப்பில் மேலெனக் குரங்கு வந்தது,
குரங்கு நிமிர்ந்ததால் மனிதன் தோன்றினான்
மனிதன் தோன்றினான் மனம் பிறந்தது
மனப் பிறப்பிலே
மரம் அழிந்தது, மழை மறந்தது...
மழை பொய்க்குமேல்,
இனி எப்படி
அடுத்த மனிதன்?
இனி எப்படி
அடுத்த உயிர்ப்பு?

-விவேக்பாரதி
29.01.2018

Comments

Popular Posts