காளித் தாலாட்டு

"நீலகன லீல ஜோஜோ" என்னும் கன்னட கீர்த்தனையைத் தங்கை சௌந்தர்யா பாட...என் மனதுக்குள் எழுந்த காளி தாலாட்டு...அவளது குரலிலேயே...

நெஞ்செலாம் நின்ற காளி - இங்கு
   நெய்கிறேன் தங்கத் தூளி!
கொஞ்சியே பாடு கின்றேன் - உன்றன்
   கோலத்தைப் போற்று கின்றேன்!

மலரினால் ஊஞ்சல் செய்தே - என்றன்
   மனதுக்குள் ஆட்டு கின்றேன்!
உலகெலாம் காக்கும் காளி! - தூளி
   உள்ளத்தில் ஆட்டு கின்றேன்!

பட்டுடை ஜொலி ஜொலிக்க, - நெற்றி
   பதக்கமே மினு மினுக்க,
அட்டிகை தக தகக்க, - செல்வ
   ஆபரணம் பூட்டு கின்றேன்!

தாமரைச் சாம ரங்கள், - தங்கத்
   தட்டிலே களப தூபம்,
பாமரக் கவியின் பாடல், - கொண்டு
   பாடித் தாலாட்டு கின்றேன்!

கண்வளர் காளித் தாயே! - என்றன்
   கண்ணில் உறங்கு தாயே!
பண்வளர்க் கின்ற பிள்ளை - நெஞ்சில்
   பதமாய் உறங்கு! ஜோஜோ!!

-விவேக்பாரதி
28.01.2018

Comments

Popular Posts