புதுவெம்பாவை

30)

மார்கழி தூங்கி மெதுவாகத் தையுதிக்க
ஊர்களி கொள்ள உவகை மனத்திலெழப்
பார்க்குள் அனைவரும் பார்த்து ரசித்திருக்க
ஓர்பவர் உள்ளத்தின் ஒய்யாரத் தேரேறி
வார்சடை ஈசன் வளப்புதல்வன் வந்திருக்க
ஆர்ப்பவர் பாடி அருந்தேனாய்ப் பொங்கலிடச்
சேர்ந்தவ ரோடு செழித்தகண நாதன்பேர்
நீர்த்துளியோ டோதி நினைத்திருப்போ மெம்பாவாய்!!


-விவேக்பாரதி
14.01.2018

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

கவிதை ஆண்டாள் - 1

மாதங்களில் அவள் மார்கழி