புதுவெம்பாவை

18)

பணிகள் அனைத்துக்கும் பக்க பலமாய்த்
துணையாய் நிலைத்தபெருந் தூணாய்க் காப்பாய்
துணிவொடு செய்திடத் தூண்டும் விசையாய்
அணங்குமை பாலகன் ஆயிரம் பூத
கணங்களின் நாதன் கணபதி நிற்பான்!
மணமலருள் வண்டாய் மயங்கித் துயிலின்
பிணியுட் கிடப்பாயோ பிள்ளாய்! எழுந்து 
பணிந்திவன் தாள்போற்றிப் பார்த்திருப்போம்  எம்பாவாய்!!

-விவேக்பாரதி
02.01.2018

Comments

பிரபலமான பதிவுகள்