மகா காளி

"சரஸ்வதி சபதம்" திடைப்படத்தில் வரும் "ராணி மகாராணி" என்ற மெட்டில்...

காளி மகா காளி!
கருமை நிறக் காளி!
காவி வண்ணச் சிங்கத்தோடு
மேவி நிற்கும் காளி!

காற்றினிலே கலைகளிலே நிறைந்திருக்கும் காளி!
கவிஞர் நெஞ்சக் கோயிலிலே கொலுவிருக்கும் காளி!
மாற்றி மாற்றி நம்மை ஆட்டி மகிழ்ந்திருக்கும் காளி!
மனதில் உள்ள தீதனைத்தும் மாய்த்து நிற்கும் காளி!

அங்கும் இங்கும் எங்கும் அன்னை நிறைந்திருப்பதால்,
அமைதி எண்ணம் அறிவில் ஊறி இன்பம் காணுமாம்!
தங்கிடாத செல்வம் மோகம் தர்க்கம் போகுமாம்!
தலை கணக்கும் பாரம் நீங்கித் தன்மை கூடுமாம்!

மனதிலுள்ள வெற்றிடங்கள் அவளுருவாய்ச் சூழும்!
மகிமை வந்து நமை அணைக்க மகிழ்ச்சி மட்டும் நீளும்!
உனது எனது என்னும் எண்ணம் உண்மை ஆவதில்லை,
உலகமீது உயிர்கள்வாழக் காளியருள் எல்லை!!

-விவேக்பாரதி
27.10.2016

Comments

Popular Posts