புதுவெம்பாவை

23)

போலிக் கவிஞர்போல் போக்காக சொல்தேடி
காலைக் பொழுதிலும் மோனம் சுமப்பாயோ?
ஆலி னடியில் அரச மரத்தின்கீழ்
நாலு தெருவிணையும் நல்ல முனைகளில்
கோலம் ஜொலிக்கக் கொலுவிருக்கும் நாயகனைப்
பாலகனாய்ச் சக்திக்குப் பாதுகாவல் செய்தவனை
நூலணி மார்பனை நூதனமாய் நாம்புகழ
காலமெலாம் காப்பாகக் கண்டிடுவோ மெம்பாவாய்!!

-விவேக்பாரதி
07.01.2018

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

கவிதை ஆண்டாள் - 1

மாதங்களில் அவள் மார்கழி