புதுவெம்பாவை

19)

தொந்தித் தலைவனைத் தூயோனை நாளெல்லாம்
வந்தித்துப் போற்றி வளமடைவார் ஏராளம்!
சந்திரன் சென்றொளிச் சூரியன் வானத்தில்
வந்த தறியாமல் வாலையே நீயின்னும்
மந்தத் துயிலில் மனத்தைச் செலுத்துவையோ?
இந்தப் பழியும் இழுக்கென் றறிகிலையோ?
செந்தேன் மணமொழுகிச் செல்லும் புனலாடி
நந்தமிழ் ஔவைப்பா நாமொழிவோம் எம்பாவாய்!! 

-விவேக்பாரதி
03.01.2018

Comments

பிரபலமான பதிவுகள்