அந்த இந்தக் காலங்கள்

ஒரு படம் தந்த கிளர்ச்சி...


பக்தி என்பது பாரில் உயர்ந்தது - அந்தக்காலம்
பக்தி என்பதோ பகட்டாய்ப் போனது - இந்தக்காலம்!


கைகள் குவித்துக் கடவுளைத் துதித்தது - அந்தக்காலம்
கைகளில் செல்ஃபோன் காட்சி பிடிப்பது - இந்தக்காலம்!

கூட்டுப் பிரார்த்தனை கூடி இருந்தது - அந்தக்காலம்!
கேட்டுப் போட்டுக் காசு கொடுப்பது - இந்தக்காலம்

ஆண்டவன் பேரில் அகமரி யாதை - அந்தக்காலம்
ஆண்டவன் யாரென அறிவு கேட்பது - இந்தக்காலம்

கோவிலுக் குள்ளே குறைகள் பேசாதது - அந்தக்காலம்
கோவிலை வைத்தே குத்துகள் வெட்டுகள் - இந்தக்காலம்!

அது அந்தக்காலம்! இது இந்தக்காலம்!

அமைதி வேண்டி ஆலயம் சென்றது - அந்தக்காலம்
அமைதி இல்லா ஆலயம் ஆச்சுது - இந்தக்காலம்

தொழுதல் ஒன்றே தொழிலாய்க் கொண்டது - அந்தக்காலம்
தொழிலாய் மாறிக் காசைப் பார்ப்பது - இந்தக்காலம்

கடவுள் கோவிலில் காட்சி கொடுத்தது - அந்தக்காலம்
கடவுளைத் தேடிக் காசினி அலைவது - இந்தக்காலம்!

செய்யும் தொழிலே தெய்வம் என்றது - அந்தக்காலம்
ஐயா அதுவே ஏமாற் றானது - இந்தக்காலம்

தெய்வத்தைக் கேள்வி கேட்டது எல்லாம் - அந்தக்காலம்
தெய்வம் இருக்கா அதுவே கேள்வி - இந்தக்காலம்

ஆமா! அந்தக்காலம்! இது இந்தக்காலம்!!

-விவேக்பாரதி
22.01.2018

Like

Comments

Popular Posts