புதுவெம்பாவை

20)

மறதிப் பிணியில் மதிகெட்டு நீயும்
உறங்கிக் கிடந்தே உயர்வுதவிர்ப் பாயோ?
மறைகள் புகழும் மகேசனின் மைந்தன்!
பொறையி னுருவாய்ப் புவிமிசை வந்தோன்!
அறுமுகன் அண்ணன்! அரிமருகன்! தீதைச்
செறுமுகத்தில் வென்றோன்! சிவந்த கழலோன்!
சிறப்புகள் பாடிச் சிலிர்த்துக் குளிர்நீர்
நிறையும்நீ ராடி நிதம்மகிழ்வோம் எம்பாவாய்!!

-விவேக்பாரதி
04.01.2018

Comments

Popular posts from this blog

மரகதப் பஞ்சகம்

கவிதை ஆண்டாள் - 1

மாதங்களில் அவள் மார்கழி