சித்திரக்கவி - இரத பந்தம்

No automatic alt text available.


இலந்தை ஐயா கொடுத்திருந்த "சக்தி யடியே சரண்" என்ற ஈற்றடிக்கு நான் எழுதிய இரத பந்தம்.

ஓரிடத்தில் மட்டும் தளை தட்டுகிறது என்றறிந்தும் இங்கே பதிவிடுகிறேன். இப்பாடலின் பொருள் எனை இதைத்தாண்டி யோசிக்க, தளை தட்டியதை மாற்ற விடவில்லை! பொறுக்க!

பாடல் - இன்னிசை வெண்பா

எண்சாண் நரகா மெரிசவநோ யூனினையே
உண்மை யாயெணி வாடி யலைவோரி
னக்னி யடக்கி மனதினை நேராக்கு
சக்தி! யடியே சரண்!


கருத்து - எட்டு சாண் நரகமாம் எரி சவத்துக்கும் நோய்க்கும் இரையாகும் மாமிச உடலை, உண்மையாய் எண்ணி வாடி அலைபவர்களின் உள்ளே எழும் தீய அக்னியை அடக்கி, அவர்கள் மனத்தினை நேராக்கு சக்தி! உனது அடியே சரணம்!

-விவேக்பாரதி
27.01.2018

Comments

Popular Posts