சித்திரக்கவி - சங்குபந்தம்
நேற்று உலகத் தாய்மொழி தினம், அதற்கான சித்திரக்கவி வாழ்த்து...
பாடல்:

பாடல்:
ஊதிடுவாய் வெண்சங்கே உன்னதமாய் மக்களெலா
மோதுகதந் தாய்மொழியை யோங்கிடவே - யோதிவிட்டால்
தம்மடை யாளமே தான்நிலையாய்த் தங்குமே
செம்மையாய் நிற்குமொழிக் காய்!
கருத்து:
வெண்மை நிற சங்கே! "மக்கள் எல்லோரும் அவரவர்கள் தாய்மொழியையே ஓங்குதற்காக ஓதுக" என நீ ஊதுவாய்! அப்படி அவர்கள் ஓதிவிட்டால், அந்த மொழிக்காக, அந்த மொழியாலே, அவரவரது அடையாளம் நிலையகத் தங்கும்.
-விவேக்பாரதி
21.02.2018

Comments
Post a Comment