நாடு போகுற நெலம

பேஸ்புக் பக்கத்தில் எங்கு பார்த்தாலும் சண்டை, வாதம், எதிர்ப்பு தெரிவித்தல், கண்டனம், மிரட்டல் பதிவு, நக்கல், வக்காளத்து போன்றவை....குமுறிய நெஞ்சம் இப்படிப் பாடி அடங்குகிறது!

நாடு போகுற நெலமையப் பாத்தா
நெஞ்சு வலிக்குதுங்க - இடையுல
மேட போடாத பேஸ்புக் தொண்டரின்
ப்ரசங்கம் நடக்குதுங்க!

ஒருத்தனப் பத்தி ஒருத்தன் பேசியே
உருப்படாம போறான் - அவன
வருத்தெடுக்க இன்னொருத்தன் பேசியே
லைக்கு வாங்கி போறான்!

இந்தக் கட்சியாம் அந்தக் கட்சியாம்
இடியிடி போராட்டம் - இதுல
சொந்த வேலைய எங்க பாக்குறோம்?
சொகுசா திண்டாட்டம்!

வக்காளத்து வாங்குற கூட்டம்
வழவழ கட்டுரைங்க - யப்பா
பக்கம் பக்கமா பாராட்டுரையா
பதிவு கெடக்குதுங்க!

வேல வெட்டியே இல்லாதது போல்
வீதியில் போராட்டம் - கொஞ்சம்
கால வழுக்குனா அந்தத் தரமேல
சொல்லடி ஆர்ப்பாட்டம்!

இப்போ
நாடு போகுற நெலமையப் பாத்தா
நெஞ்சு வலிக்குதுங்க - இப்புடிப்
பாடிப் பாடியே நகருர வாழ்க்க
பழியச் சுமத்துதுங்க!!

 -விவேக்பாரதி
06.03.2018

Comments

Popular Posts