தூக்கப் பிதற்றல்

உன் நினைவும் உன் அழகும்
உருக்குலைக்கும் நேரத்தில்,
உதவ வந்த தூக்கம் கூட
உயரத்தில் பறக்கிறது

என் கனவில் எண்ணத்தில்
எப்போதும் உன் பிம்பம்,
எழிலாக நிழலாட
ஏக்கந்தான் பிறக்கிறது!

மனம் எங்கும் உன் தோற்றம்!
மாயக் குழல் நீட்டம்!
மலர் வாசம், உடல் வாசம்
மயக்கத்தைச் செய்கிறது!

தினம் நூறு கவிதைகள்!
தித்திக்கும் நினைவுகள்!
திரளாக மார்புரசத்
திக்கெங்கும் சிதறுகிறேன்!

எனக்கான ஒரு பெண்மை!
எழிலாடும் உயிர் பொம்மை!
என் காளி தந்த நிலா
எப்போதும் சிரிக்கிறது!

எனக்கென்ன அச்சம் இனி?
எதற்கிந்த வெண்மை பனி ?
எழிலோடு விளையாட
என்றெண்ணிப் பூக்கிறது!!

-விவேக்பாரதி
12.02.2018

Comments

Popular Posts