காதலாவோம்

நீ ஒரு சொல்
நான் ஒரு சொல்
கவிதை ஆவோமா?
நீ ஒரு கல்
நான் ஒரு கல்
கோவில் ஆவோமா?
நீ ஒரு நூல்
நான் ஒரு நூல்
உடைகள் ஆவோமா?
நீ என நான் என
நாம் மறந்தே
பறவை ஆவோமா?

நீச்சல் இடுகின்ற நீருக்குள்ளே
சின்ன மீன்கள் ஆவோமா?
கூச்சல் இசைக்கின்ற
கிளிகளைப் போல்
கிளைகள் காண்போமா?
தீச்சுமை போல், அதில்
நீர்ச்சுகம் போல்
திணறிப் போவோமா?
காதலியே
உன் காதலன் நான்!
வா காதல் ஆவோமா?

-விவேக்பாரதி
12.02.2018

Comments

பிரபலமான பதிவுகள்