எண்ணத்த மாத்துங்க


எண்ணத்த மாத்துங்க - தம்பி 
எண்ணத்த மாத்துங்க 
எழுந்து நிக்க வேணுமின்னா 
எண்ணத்த மாத்துங்க! 

யாரோ சொல்வத நம்பிக்கிட்டு 
இருப்பது சரியா? - இங்க 
யாராண்டா என்னான்னு 
வெறுப்பதுஞ் சரியா?
போராடாம வாழ்க்கையில 
பொழைப்பது சரியா? - சின்ன 
பொட்டுக்கடலைக்கும் போராட்டமுன்னு 
குதிப்பது சரியா? 

தமிழன் தமிழன் உரிமையின்னு 
தாங்கிப் புடிக்கிறோம் - எவன் 
தமிழனின்னு உண்ம கேட்டா 
தலையச் சொரியிறோம்! 
குமிழப்போல நிமிஷத்துல 
ஒடைஞ்சு போறதா? - ஒரு 
கொள்கை இல்லாக் கூட்டமாக 
நாம வாழ்வதா?

புரட்சி வளர்ச்சி எழுச்சியின்னு 
புகழ்ந்து பேசுறான் - அவன் 
புகழுக்காக உண்மையெல்லாம் 
பொறட்டிப் பேசுறான்
அரசியலச் சாக்கடைன்னு 
அசிங்கப் படுத்துறான் - நம்மள 
அடக்கி வெச்சே ஆளப்போறோம்னு 
ஆட்சி நடத்துறான்! 

படிக்குறத பக்குவமா 
பயன்படுத்தோணும் - பொய்யப் 
பரப்புங் கூட்டம் தெரிச்சு ஓட 
படை நடத்தோணும்
படிக்கப்போகும் பையிக்குள்ள
கத்தி எதுக்குடா? - நம்ம
கண்ணுக்குள்ள காதல் வேணும் 
காமமெதுக்குடா?? 

-விவேக்பாரதி
16.03.2018

Comments

Popular Posts