Posts

Showing posts from April, 2018

வா!வா!

எளிய சிறிய பதங்கள் பழகி இதயம் திருட வா! உன் மொழியில் வளைவில் அசையும் புலமை அலரைக் களைய வா! நெடிய கரத்தின் நுனியில் இதழில் கவிதை எழுத வா! பொன் சதங்கை அசைய இதயக் கனவில் நடனம் பழக வா! மதுர மொழியில் செவியில் இசையின் மழையைப் பிழிய வா! இதர விஷயம் இரவில் புரியும் இனிமை பருக வா! சுவையும் சுகமும் மனமும் பயமும் களவில் தெளிய வா! நளின அழகில் நடன மொழியில் நகரை மறக்க வா! -விவேக்பாரதி 25.04.2018

மலரும் தர்மம்

வாழ்க்கை நமக்காய் மாறும் - அந்த     வானும் கைகளில் சேரும் தாழ்வும் உயர்வைச் சேர்க்கும் - பின்     தாய்நிலம் உன்னைப் பார்க்கும்! தூங்கத் தேவை இருட்டு - ஒளி     தோன்றத் தேவை விழிப்பு ஏங்கிக் கிடப்பது தாழ்வு - தலை     ஏற்றி நிமிர்வதே வாழ்வு! வருவார் போவார் சிலபேர் - நம்     வரமாய் வருவார் சிலபேர் தருவார் பெறுவார் சிலபேர் - நாம்     தருவோம் பெறுவோம் உறவே! எதுவும் நடக்கும் நாளை - அது     எல்லாம் வெற்றி வேளை கதவைத் திறந்தால் காற்று - நம்     கவலை மறந்தால் வாழ்வு! வாழ்க்கை ஓடை ஓடும் - நீர்     வாடித் தேங்குதல் பாவம்! தாழ்க்கை ஓர்நாள் உயரும் - நம்     தர்மம் அன்று மலரும்!! -விவேக்பாரதி 16.04.2018

மழை பொழிந்திடும் வண்ணத்தைக் கண்டுநான்

கொட்டடி வானே - மழை கொட்டடி வானே! தட்டி முட்டி இடியி டிக்க வெட்டி மின்னல் மினுமி னுக்கப் பட்டி தொட்டி எங்கும் வெள்ளம் சொட்டிச் சொட்டி உடல்ந னைக்கக் கொட்டடி வானே - மழை கொட்டடி வானே! தென்றல் வந்து மழைத டுக்க அன்றில் வந்து சுரமி சைக்க கன்றும் ஆவும் கதக தக்கக் குன்று வெள்ளம் குளிர்கொ டுக்கக் கொட்டடி வானே - மழை கொட்டடி வானே! -விவேக்பாரதி 26.04.2018

காதல் வணக்கம்

காதலித்தால் வணக்கம்! காதலித்த பெண்ணையே கைப்பிடித்தால் வணக்கம்! கைப்பிடித்த பெண்ணை இன்னும் காதலித்தால் வணக்கம்! கலவி கொண்டால் வணக்கம்! கைப்பிடித்த பின்னரே கலவி கொண்டால் வணக்கம்! கலவி தீர்ந்த பின்னரும் காதலித்தால் வணக்கம்! பிள்ளை பெற்றால் வணக்கம்! பிள்ளை பெற்ற பின்னரும் காதலித்தால் வணக்கம்! பெற்ற பிள்ளை பெண்ணெனில் பேணி நின்றால் வணக்கம்! பேணி நின்ற பெண்ணையும் காதலித்தால் வணக்கம்!  ஆண் பிள்ளை பெற்றதும் அறிவு தந்தால் வணக்கம்! அறமுரைத்தால் வணக்கம்! ஆசை தந்தால் வணக்கம்! அனைத்துக்கும் மேல் உலகத்தில் யாவர்க்கும் அன்பு செய்தால் வணக்கம்! ஆம்! மீண்டும் காதலித்தால் வணக்கம்!! -விவேக்பாரதி 26.04.2018

ஆட்டம் தொடங்கட்டும் - சந்தவசந்தக் கூட்டக் கவியரங்கம்

இறை வணக்கம் கால்தூக்கி ஆடுகின்ற காளனுடன் சூலமெனும் வேல்தூக்கி ஆடுகின்ற வேட்கையினாள் - மேல்தூக்க நாட்டியவி நாயகனாய் நாடுவந்த தெய்வதமே பாட்டிதுவும் பீடுறவே பார்! தலைவர் வணக்கம் புதுவைக் குயிலைப் புதுவிதப் பாக்கள் புனைந்தளித்து மதுவைக் கவிழ்க்கும் மலையை இந்நாள் மகத்துவமாய் புதுமைக் கவிதைப் பெருஞ்சுட ரான புனிதமிகு கதிரை தியாகத் தரசரை வாழ்த்திக் கவிப்பவனே! அவைக்கு நன்றி செந்தமிழ்ச் சொற்கள் ஆடும்    செழுமிகு மரபுக் கூடம் பைந்தமிழ்க் கவிஞர் ஆடும்    பழகுநல் அரங்கக் கூடம் நந்தமிழ்ச் சான்றோர் ஆடும்    நாவுடை மன்றில் இங்கே எந்தமிழ் ஆடு தற்கும்    எமக்கிடம் தந்தீர் நன்றி! ஆட்டம் தொடங்கட்டும் கொடுத்திருக்கும் தலைப்பைத்தான் எண்ணிப் பார்த்தால்    கொள்ளைகொள்ளை ஆனந்தம் மனத்துக் குள்ளே விடுத்திருக்கும் கட்டளையோ கவிதை யாக்க,    விளையாடிப் பார்த்திடவோ நெஞ்சம் சொல்ல, எடுத்திருக்கும் எண்ணத்தை ஏற்ற வாறாய்    ஏற்றிட நினைக்கின்றேன்! செவிகள் தம்மை மடுத்திருக்கும் உளங்களுக்கென் வணக்கம்! இந்த    மகத்தான தலைப்புதந்த வர்க்கோ நன்றி! ஆட்டந்தொ டங்கட்டும் எனும்த லைப்பை    ஆர்தருவார் கூறுங்கள்! எண்ணிப் பார்த்தால் நாட்ட

ஆட்டம் தொடங்கட்டும் - சந்தவசந்தக் கவியரங்கம்

Image
- இறை வணக்கம் - கால்தூக்கி ஆடுகின்ற காளனுடன் சூலமெனும் வேல்தூக்கி ஆடுகின்ற வேட்கையினாள் - மேல்தூக்க நாட்டியவி நாயகனாய் நாடுவந்த தெய்வதமே பாட்டிதுவும் பீடுறவே பார்! - தலைவர் வணக்கம் -  புதுவைக் குயிலைப் புதுவிதப் பாக்கள் புனைந்தளித்து மதுவைக் கவிழ்க்கும் மலையை இந்நாள் மகத்துவமாய் புதுமைக் கவிதைப் பெருஞ்சுட ரான புனிதமிகு கதிரை தியாகத் தரசரை வாழ்த்திக் கவிப்பவனே! - அவைக்கு நன்றி -   செந்தமிழ்ச் சொற்கள் ஆடும்    செழுமிகு மரபுக் கூடம் பைந்தமிழ்க் கவிஞர் ஆடும்    பழகுநல் அரங்கக் கூடம் நந்தமிழ்ச் சான்றோர் ஆடும்    நாவுடை மன்றில் இங்கே எந்தமிழ் ஆடு தற்கும்    எமக்கிடம் தந்தீர் நன்றி! - ஆட்டம் தொடங்கட்டும் -   கொடுத்திருக்கும் தலைப்பைத்தான் எண்ணிப் பார்த்தால்    கொள்ளைகொள்ளை ஆனந்தம் மனத்துக் குள்ளே விடுத்திருக்கும் கட்டளையோ கவிதை யாக்க,    விளையாடிப் பார்த்திடவோ நெஞ்சம் சொல்ல, எடுத்திருக்கும் எண்ணத்தை ஏற்ற வாறாய்    ஏற்றிட நினைக்கின்றேன்! செவிகள் தம்மை மடுத்திருக்கும் உளங்களுக்கென் வணக்கம்! இந்த    மகத்தான தலைப்புதந்த வர்க்கோ நன்றி! ஆட்டந்தொ டங்கட்டும் எனும்த லைப்பை    ஆர்தருவார் கூறுங்கள்! எண

சுப்புரத்தினம்

பாக்க ளுக்குள் வீச்சினைப்     பார்த்து வைத்த நாயகன்! தீக்க விஞன் தாசனாம்     தீமை தன்னைச் சாடுவான்! கூக்கு ரல்கொ டுத்திடும்     கொள்கை மாந்தர் நெஞ்சிலே தேக்கின் வீரம் தீட்டுவான் '     தேச சுப்பு ரத்தினம்! கடவு ளையெ திர்த்தவன்!     கவிதை யைவ ளர்த்தவன்! படப டென்று பேசுவான்!     பட்ட வற்றை எழுதுவான்! சிடுசி டுத்த இட்லரும்     சிரிப்புச் சார்லி சாப்ளினும் உடுத்திக் கொண்ட மீசையின்     உயரம் சுப்பு ரத்தினம்! இருண்ட வீடு காட்டினான்!     இயக்கக் கொள்கை நாட்டினான்! பெருகும் வீரக் கத்தியைப்     பெண்ணி டத்தில் நல்கினான்! அருமைக் காதல் தத்துவம்     அழகி யற்கைச் சித்திரம் பருக வைத்த தாயவன்     பாட்டுச் சுப்பு ரத்தினம்! புதுவை கண்ட குயிலிவன்     புரட்சி சொன்ன கவியிவன் மதுவை யொத்த கவிதையால்     மண்ணி லத்தில் வாழ்பவன்! அதிவி ரைவில் பாடுவான்     அரச வைக்க விஞனாம் மதிகொ டுத்த புலவனாம்     மன்னன் சுப்பு ரத்தினம்! -  விவேக்பாரதி 29.04.2018

வீதி வருகை

துளையில்லா மூங்கில் தேகம் தென்றலை இசையாக்க, வலையில்லாக் கண்கள் என்னை வாளை மீனாக்க, கனமில்லா நினைவு மோதிக் கனவைத் தூளாக்க, ரணம்செய்யாக் கூந்தல் வருடி ராத்திரி சுமையாக்க,  திமிரில்லா அழகும் நெஞ்சைத் தினமும் பந்தாட இமையெல்லாம் பருந்தாய் மாறி இருதயம் களவாட மொழியெல்லாம் மறந்து வாட மௌனப் புன்னகையாள் விழிமூடும் ஆடி அணிந்தே வீதியில் வருகின்றாள்!! -விவேக்பாரதி 26.04.2018

இறுதி ஞானம்

தொட்டிலில் துயின்ற மேனி     தூளியில் தவழ்ந்த மேனி பட்டுமெத் தையின் மீது     பழகிடக் கிடந்த மேனி கட்டிலில் பயின்ற மேனி     கடைசியில் படுப்ப தெங்கே? கட்டிய மூங்கில் ஓலைக்     கற்றையின் படுக்கை தானே!! -விவேக்பாரதி 21.04.2018

உண்கண்

Image
  கண்ணுக்கு மையழகாம் கண்ணழகா? மையழகா? பெண்ணுக்கும் ஏதழகு பேரதிர்ச்சி - உண்மையிலே பெண்ணென்றால் பேரழகு பின்பெதற்கு வேறழகு கண்ணென்றால் பெண்ணென்று காட்டு!! -விவேக்பாரதி 27.04.2018

உண்கண்

Image
  கண்ணுக்கு மையழகாம் கண்ணழகா? மையழகா? பெண்ணுக்கும் ஏதழகு பேரதிர்ச்சி - உண்மையிலே பெண்ணென்றால் பேரழகு பின்பெதற்கு வேறழகு கண்ணென்றால் பெண்ணென்று காட்டு!! -விவேக்பாரதி 27.04.2018

பூக்குடையும் பூக்கூடையும்

Image
பூக்குடை வைத்த பூக்கூடை - இவள்     பூமியில் நகரும் தேன்சோலை  பாக்கடை வைக்கும் பாமாலை - உடல்     பாற்கடல் வெண்ணெய்! பாலாடை!  நடப்பது போலத் தவழ்ந்திடும் காற்று     நளின அழகினில் ரம்பையின் மாற்று  கடிப்பது போலப் பார்த்திடும் மங்கை     கவிதை இவளது காலில் சதங்கை! (பூக்குடை)  சாலையில் நகரும் தேவதை வம்சம்     சரிக்கப் பிறந்த ரதியின் அம்சம்!  காலையும் மாலையும் அழகியல் பேசும்     கருப்புக் கூந்தலில் சந்தனம் வீசும் (பூக்குடை)  ஒருபுறம் கன்னி எதிரினில் வந்தால்     உள்ளம் அலைபாயும் - கொடும்  திரிபுரம் கண்ட தீயென துள்ளே     திரண்டு மெருகேறும்!  திரும்பிப் பார்த்தால் பார்த்த நொடியிலே     திக்குகள் பொடியாகும் - முகை  அரும்பச் சிரித்தால் ஆயிரம் மின்னல்     அகத்தில் உருவாகும்! அட (பூக்குடை)  -விவேக்பாரதி  27.04.2018

வெயில் அவள் வெண்பா

காலை இளஞ்சூடு கன்னியவள் தேகத்தின் கோலம் தனைக்காட்டிக் கொள்ளையிடும்! - காலை உதிக்கும் கதிராக உள்ளத்தே ஆசை பதிக்குமொளி காதலின் பாடு!  பட்டப் பகல்வெயில் பாவை சினமனத்தின் கொட்டமதைக் காட்டிக் கொதிபேற்றும்! - எட்ட எழுங்கானல் நீராய் எதிரூடல் தோன்றி விழுங்காதல் செய்யும் வினை! மஞ்சள் வெயில்மாலை மங்கை முகநாணக் கொஞ்சல் தனைக்காட்டிக் கொக்கரிக்கும்! - நெஞ்சம் அவள்நினைப்பில் மேலே அழியும் நிலவாய்த் துவளுமிது காதலின் தொற்று! -விவேக்பாரதி 24.04.2018

சமயபுரத் தேர்

சித்திரையில் முத்துமாரி தேர் வருகிறது - அவள்     சிவந்தமேனி ஏந்திக்கொண்டு தேர் வருகிறது இத்தரையில் மாரியம்மன் தேர் வருகிறது - நமக்     கின்பமெல்லாம் அள்ளித்தர ஊர் வருகிறது! தேர் வருகிறது - அது ஊர் வருகிறது! சமயபுரத் தாளமர்ந்த தங்கத் தேரடா - தம்பி     சகலவினை தீர்க்குமுமை சொந்தத் தேரடா நமையும்காக்க நன்மைதேக்க உருளும் தேரடா - பக்தி     நினைப்பினிலே வந்தகூட்டத் திரளைப் பாரடா! தேர் வருகிறது - அது ஊர் வருகிறது! தங்கக்குதிரை ரெண்டுபூட்டி நகரும் தேரடா - புவி     தாங்குகின்ற முத்துமாரி அமரும் தேரடா எங்கும்சக்தி கோஷம்பொங்க நின்ற தேரடா - பகை     ஏறிமாய்த்த தேவிவந்து வென்ற தேரடா! தேர் வருகிறது - இங்கே  ஊர் வருகிறது! வடம்பிடிக்க வந்தமக்கள் வாட்டம் போகுமே - அவள்     வட்டவிழி பட்டுவிட்டால் வலிமை செருமே! குடமெடுத்துத் திரண்டுநிற்கும் பக்தர் கூட்டமே - மனம்     கும்பிட்டால் அன்னையருள் நமக்குள் ஈட்டமே! தேர் வருகிறது - இங்கே ஊர் வருகிறது! வீதியெங்கும் குங்குமத்தை வீசு கின்றதே - அது     வீணர்தம்மை ஏய்க்கவந்து மோது கின்றதே ஓதுகின்ற கோஷமெல்லாம் தேரிழுக்கவே - கரம்    

சமயபுரத் தேர்

சித்திரையில் முத்துமாரி தேர் வருகிறது - அவள்     சிவந்தமேனி ஏந்திக்கொண்டு தேர் வருகிறது இத்தரையில் மாரியம்மன் தேர் வருகிறது - நமக்     கின்பமெல்லாம் அள்ளித்தர ஊர் வருகிறது! தேர் வருகிறது - அது ஊர் வருகிறது! சமயபுரத் தாளமர்ந்த தங்கத் தேரடா - தம்பி     சகலவினை தீர்க்குமுமை சொந்தத் தேரடா நமையும்காக்க நன்மைதேக்க உருளும் தேரடா - பக்தி     நினைப்பினிலே வந்தகூட்டத் திரளைப் பாரடா! தேர் வருகிறது - அது ஊர் வருகிறது! தங்கக்குதிரை ரெண்டுபூட்டி நகரும் தேரடா - புவி     தாங்குகின்ற முத்துமாரி அமரும் தேரடா எங்கும்சக்தி கோஷம்பொங்க நின்ற தேரடா - பகை     ஏறிமாய்த்த தேவிவந்து வென்ற தேரடா! தேர் வருகிறது - இங்கே  ஊர் வருகிறது! வடம்பிடிக்க வந்தமக்கள் வாட்டம் போகுமே - அவள்     வட்டவிழி பட்டுவிட்டால் வலிமை செருமே! குடமெடுத்துத் திரண்டுநிற்கும் பக்தர் கூட்டமே - மனம்     கும்பிட்டால் அன்னையருள் நமக்குள் ஈட்டமே! தேர் வருகிறது - இங்கே ஊர் வருகிறது! வீதியெங்கும் குங்குமத்தை வீசு கின்றதே - அது     வீணர்தம்மை ஏய்க்கவந்து மோது கின்றதே ஓதுகின்ற கோஷமெல்லாம் தேரிழு

தோழியும் மழையும்

தோழி மழையில் நனைவ தாக     சேதி சொன்ன இணையமே! வாழி அந்த வானம் என்று     வாழ்த்துச் சொல்லச் சென்றுவா! தோழி மழையில் நனைவ தில்லை!     தோன்று மந்த துளிகள்தாம், கீழி றங்கி யவளு டல்மேல்     கிளர்ச்சி கொண்டு நனையுதாம்! * மழையில் நனையாதிரு - அழகே     முகில்கள் ஜொள்ளூற்றிடும் மழையில் நனையாதிரு - அழகே     வான வில்தோற்றிடும் நீருன் மேலேறினால் - அழகே     நெருப்புத் தூளாகிடும்! காரில் நனையாதிரு - அழகே     காய்ச்சல் பூநீட்டிடும்! துளிகள் உடல்தீண்டினால் - அழகே     சொர்க்கம் எனத்துள்ளிடும் களியில் உயிர்நீத்திடும் - அழகே     கண்கள் சிவப்பாகிடும்! உடைகள் ஈரமானால் - அழகே    உலர்த்தத் தென்றல்வரும் குடைகள் நீதாங்கிடு - அழகே     கொண்டல் இடிகொண்டிடும்! மின்னல் இடைகாணுமேல் - அழகே     மிரண்டு கண்ணீர்விடும் பின்னல் நிறம்காண்கையில் - மேகம்     பிழிந்து வெளுப்பாகிடும் எனக்குக் கவலையெல்லாம் - இயற்கை     என்ன படுமென்பதே! உனக்குச் சந்தோஷமா? - போபோ     ஊரில் மழையாடிடு வெட்கம் கொஞ்சம்படு - அதிலே     வெய்யில் தலைகாட்டிடும் புட்கள் சிறகைப்பெறும் - மீண்டும்     புயலின் வலிவந்திடும் மெல

தோழியும் மழையும்

தோழி மழையில் நனைவ தாக     சேதி சொன்ன இணையமே! வாழி அந்த வானம் என்று     வாழ்த்துச் சொல்லச் சென்றுவா! தோழி மழையில் நனைவ தில்லை!     தோன்று மந்த துளிகள்தாம், கீழி றங்கி யவளு டல்மேல்     கிளர்ச்சி கொண்டு நனையுதாம்! * மழையில் நனையாதிரு - அழகே     முகில்கள் ஜொள்ளூற்றிடும் மழையில் நனையாதிரு - அழகே     வான வில்தோற்றிடும் நீருன் மேலேறினால் - அழகே     நெருப்புத் தூளாகிடும்! காரில் நனையாதிரு - அழகே     காய்ச்சல் பூநீட்டிடும்! துளிகள் உடல்தீண்டினால் - அழகே     சொர்க்கம் எனத்துள்ளிடும் களியில் உயிர்நீத்திடும் - அழகே     கண்கள் சிவப்பாகிடும்! உடைகள் ஈரமானால் - அழகே    உலர்த்தத் தென்றல்வரும் குடைகள் நீதாங்கிடு - அழகே     கொண்டல் இடிகொண்டிடும்! மின்னல் இடைகாணுமேல் - அழகே     மிரண்டு கண்ணீர்விடும் பின்னல் நிறம்காண்கையில் - மேகம்     பிழிந்து வெளுப்பாகிடும் எனக்குக் கவலையெல்லாம் - இயற்கை     என்ன படுமென்பதே! உனக்குச் சந்தோஷமா?

ஒரு கவிதைக்கான காத்திருப்பு

Image
கவிதைக் கான காத்திருப்பு - என்     கன்னம் வழியே கசிகிறது  சுவைக்கும் பொழுதின் தவிதவிப்பு - என்     சொல்லின் வழியே சுடர்கிறது!  அடங்க மறுக்கும் மனசாட்சி - தன்     ஆட்சி இழந்து நிற்கிறது  உடலில் எங்கும் வியர்வைமழை - குளிர்     ஊற்றும் பொழுதும் பொழிகிறது!  பக்கம் அமரும் பாவைமுகம் - என்     பருவம் காண மறுக்கிறது  அக்கம் பக்கம் ஆட்கள்மயம் - அதில்     அசரா நெஞ்சம் துடிக்கிறது!  குளிரும் கூடச் சுடுகிறது - என்     குருதிக் குள்போர் நிகழ்கிறது!  வெளியில் தெரியா தென்றாலும் - என்     வேத னைகள் இனிக்கிறது!  ஒற்றைக் கணத்தில் வந்தபுயல் - என்       உலகை மொத்தம் அழிக்கிறது  சற்று விலகிப் பார்த்தாலோ - அதன்     சமையல்  கவிதை கொடுக்கிறது!! -விவேக்பாரதி 13.04.2018

நீயிருப்பதால்

Image
நீயிருப்பதால் இங்கு நானிருக்கிறேன்! நீயசைப்பதால் மண்ணில் நான்நடிக்கிறேன்! தீயிருப்பதால் என்னைப் பாடவைக்கிறாய் !  திமிருப்பதால் கொஞ்சம் ஓடவைக்கிறாய்! பூமணத்திலே எழுந்து வார்த்தை தருகிறாய்! தாமதத்திலே என்னைத் தாங்கிக் கொள்கிறாய்! தீமனத்தில் நீரையூற்றி நீ தணிக்கிறாய்! நாமணக்கப் பாடல்தந்து நீ சிரிக்கிறாய்! ஏங்கவைத்துக் கதறி என்னை எழுதவைக்கிறாய்! தூங்கவிட்டு பின்னெழுப்பிக் கனவு தருகிறாய் வாங்கிவிட்ட பாவமென்ன?  என்னைக் கையிலே தாங்கிக்கொள்ள நேரமென்ன? வா அணைக்கவே! மாலைநேரத் தென்றல் போல நீ நுழைகிறாய்! கோலம்நூறு என்னகத்தில் நீ வரைகிறாய்! வேலையென்ன பாரினுக்குள் என்னை வைக்கிறாய் காலமென்னும் நூல்படைத்து நீ அசைக்கிறாய்! ஒற்றைக் கையில் வீணையோடு நீ ஜொலிக்கிறாய் கற்றைக் கூந்தல் காற்றிலாடத் தீ வளர்க்கிறாய்! நெற்றிக் கண்ணன் பாதியாகி நிமிரவைக்கிறாய் வெற்றி உண்மை வீரமாகக் கொலுவிருக்கிறாய்! -விவேக்பாரதி 24/06/17 https://soundcloud.com/vivekbh arathi/cc1smki8jvkr

எழுத வைக்கிறாள்

எழுத வைக்கிறாள்! - தேவி    எழுத வைக்கிறாள்! எழுக வென்று இறைவி என்னை    எழுத வைக்கிறாள்! பழுத கற்றியே - எனைப்    படர வைக்கிறாள்! புழுவெ னக்குள் புலியின் வீரம்    பூட்டி வைக்கிறாள்!  வண்ண மாக்குவாள் - மன    வன்மை கூட்டுவாள்! எண்ணத் தேரி லேறி நின்று    என்னை ஆட்டுவாள்! கண்ணில் காண்கிற - எழில்    காட்சி யாவையும், பண்ணி லேற்ற சக்தி தந்து    பார்த்து மகிழுவாள்! பூவின் வாசனை - மதி    புரியும் யோசனை யாவு மாகி உள்ளி ருந்து    யாண்டு மாள்கிறாள்! ஏவு மவளது - பணி    ஏற்கு மடிமையை மேவி வந்து பலவும் சேர    மேன்மை தருகிறாள்!! -விவேக்பாரதி  30.07.2016

நதி இணைத்தல்

எதுபலம் தோழரே! நீங்களே சொல்வீர்! எதுசரி மக்களே! சிந்தனை செய்வீர்! இவ்விடம் இந்நிலம் என்றறிந்தா - மழை     இதயம் திறந்து பொழிகிறது? எவ்விடம் சேருவம் எனத்தெரிந்தா - காற்று     ஏறி வான்மேல் திரிகிறது? இவர்நிலம் அவர்நிலம் எனப்பிரித்தா - நதி     இமயத் தியக்கம் தொடர்கிறது? அவரவர் சுயநலம் அடைத்துவைத்தோம் - ஓர்     அவசியம் ஆயின் இணைப்பிலென்ன? ஒன்றாய் வாழ்வது பலமானபின் - பாதை     ஒடியா திருப்பது சுவடானபின் நன்றாய் நதிநீர் இணைத்தாலென்ன - இதில்     நமக்கே வலிமை! செய்தாலென்ன? நாட்டுக் குள்ளே ஒற்றைநதி - அது     நடுவில் ஓடும் ஜீவநதி காட்டுக் கரைகள் எனவளர்த்தல் - நெற்     கலைக்கே முதன்மை என்றுபல தங்கச் சட்டம் அமைத்திடலாம் - அதைத்     தக்கோர் நனவாய் ஆக்கிடலாம் கங்கை பொருநை ஓருருவே! - அட     காவிரி வைகை நீருருவே! கலப்பில் குறைகள் அவைசொல்லா - விதி     கடலென் றறிந்தும் அவைகலையா! கலப்பில் வலிமை உண்டன்றோ - பழங்     கதைகள் காட்டும் அறமன்றோ!! -விவேக்பாரதி 08.09.2017

நதி இணைத்தல்

எதுபலம் தோழரே! நீங்களே சொல்வீர்! எதுசரி மக்களே! சிந்தனை செய்வீர்! இவ்விடம் இந்நிலம் என்றறிந்தா - மழை     இதயம் திறந்து பொழிகிறது? எவ்விடம் சேருவம் எனத்தெரிந்தா - காற்று     ஏறி வான்மேல் திரிகிறது? இவர்நிலம் அவர்நிலம் எனப்பிரித்தா - நதி     இமயத் தியக்கம் தொடர்கிறது? அவரவர் சுயநலம் அடைத்துவைத்தோம் - ஓர்     அவசியம் ஆயின் இணைப்பிலென்ன? ஒன்றாய் வாழ்வது பலமானபின் - பாதை     ஒடியா திருப்பது சுவடானபின் நன்றாய் நதிநீர் இணைத்தாலென்ன - இதில்     நமக்கே வலிமை! செய்தாலென்ன? நாட்டுக் குள்ளே ஒற்றைநதி - அது     நடுவில் ஓடும் ஜீவநதி காட்டுக் கரைகள் எனவளர்த்தல் - நெற்     கலைக்கே முதன்மை என்றுபல தங்கச் சட்டம் அமைத்திடலாம் - அதைத்     தக்கோர் நனவாய் ஆக்கிடலாம் கங்கை பொருநை ஓருருவே! - அட     காவிரி வைகை நீருருவே! கலப்பில் குறைகள் அவைசொல்லா - விதி     கடலென் றறிந்தும் அவைகலையா! கலப்பில் வலிமை உண்டன்றோ - பழங்     கதைகள் காட்டும் அறமன்றோ!! -விவே

அணையுடை அழகே!

அழகே! அடங்கி இருந்தது போதும் அணையுடைத்து வெளியே வா! உன் காதலன் நீயின்றி உணவு கொள்ளாமல் வறட்சியில் வாடுகிறேன்! நீ எப்படியும் இறுதியில் என்னோடு தானே வீழ வேண்டும்? இப்போதே வா! நாம் வாழ வேண்டும்! நீ பிறந்த வீட்டில் உன்னைப் பூட்டி வைத்திருப்பதால் நம் காதலென்ன நசியவா போகிறது? என் மனமுடைக்கத் தெரிந்த உனக்கு அக்கதவை உடைக்கவா தாமதம்? அழகே! அணையுடைத்து வெளியே வா! உன் காதலன் கரைவது கேட்கவில்லையா? உன் கண்ணென்ன போகத்திரை மறைவிலா? கண்ணுக்குத் திரைபோடலாம் காட்சிக்குத் திரையேதடி? என் நிலை அறியாத உன் வீட்டார் உன்னை அடைத்து வைத்து என்னை வதைக்கிறார்கள்! எனினும் நீ கலங்காதே! கல்லுக்குத் தெரியுமா கண்ணீரின் சூடு? நான் உன்னைக் கேட்டுவிட்டேனாம் என் சொத்தாக நீ வைத்திருந்த அத்தனையையும் போட்டுக் கொளுத்துகிறார்! வன்முறை வளர்வதல்ல கண்ணே வளர்க்கப் படுவது! அழகே! அணையுடைத்து வெளியே வா! நம் காதலைத்தான் இலக்கியங்கள் பாடுகின்றதே! "நடந்தாய் வாழி" என்று! இன்னுமென்ன வேண்டும் சான்று? நீ பிறந்தது எங்கோ என்றாலும் வளர்ந்து தவழ்ந்து நடமாடி ஓடுவது என் மார்பு தானடி! காதலியே! என் காவிரியே! அடங்கிக் கிடந்தது போதும் அணையுட