இறுதி ஞானம்

தொட்டிலில் துயின்ற மேனி
    தூளியில் தவழ்ந்த மேனி
பட்டுமெத் தையின் மீது
    பழகிடக் கிடந்த மேனி
கட்டிலில் பயின்ற மேனி
    கடைசியில் படுப்ப தெங்கே?
கட்டிய மூங்கில் ஓலைக்
    கற்றையின் படுக்கை தானே!!


-விவேக்பாரதி
21.04.2018

Comments

Popular posts from this blog

கவிதை ஆண்டாள் - 1

மரகதப் பஞ்சகம்

மாதங்களில் அவள் மார்கழி