மழை பொழிந்திடும் வண்ணத்தைக் கண்டுநான்

கொட்டடி வானே - மழை
கொட்டடி வானே!

தட்டி முட்டி இடியி டிக்க
வெட்டி மின்னல் மினுமி னுக்கப்
பட்டி தொட்டி எங்கும் வெள்ளம்
சொட்டிச் சொட்டி உடல்ந னைக்கக்

கொட்டடி வானே - மழை
கொட்டடி வானே!

தென்றல் வந்து மழைத டுக்க
அன்றில் வந்து சுரமி சைக்க
கன்றும் ஆவும் கதக தக்கக்
குன்று வெள்ளம் குளிர்கொ டுக்கக்

கொட்டடி வானே - மழை
கொட்டடி வானே!

-விவேக்பாரதி
26.04.2018

Comments

Popular Posts