வா!வா!

எளிய சிறிய பதங்கள் பழகி
இதயம் திருட வா! உன்
மொழியில் வளைவில் அசையும் புலமை
அலரைக் களைய வா!

நெடிய கரத்தின் நுனியில் இதழில்
கவிதை எழுத வா! பொன்
சதங்கை அசைய இதயக் கனவில்
நடனம் பழக வா!

மதுர மொழியில் செவியில் இசையின்
மழையைப் பிழிய வா!
இதர விஷயம் இரவில் புரியும்
இனிமை பருக வா!

சுவையும் சுகமும் மனமும் பயமும்
களவில் தெளிய வா!
நளின அழகில் நடன மொழியில்
நகரை மறக்க வா!

-விவேக்பாரதி
25.04.2018

Comments

Popular Posts