வீதி வருகை

துளையில்லா மூங்கில் தேகம்
தென்றலை இசையாக்க,
வலையில்லாக் கண்கள் என்னை
வாளை மீனாக்க,
கனமில்லா நினைவு மோதிக்
கனவைத் தூளாக்க,
ரணம்செய்யாக் கூந்தல் வருடி
ராத்திரி சுமையாக்க, 


திமிரில்லா அழகும் நெஞ்சைத்
தினமும் பந்தாட
இமையெல்லாம் பருந்தாய் மாறி
இருதயம் களவாட
மொழியெல்லாம் மறந்து வாட
மௌனப் புன்னகையாள்
விழிமூடும் ஆடி அணிந்தே
வீதியில் வருகின்றாள்!!

-விவேக்பாரதி
26.04.2018

Comments

பிரபலமான பதிவுகள்