Posts

Showing posts from May, 2018

சொல்லுக்குள் என்ன

Image
புல்லாங்குழலா? புரியா அனலா? என் சொல்லுக்குள் என்ன? அது சொல்லுங் கதையென்ன? தென்றல் மணமா? தேங்காச் சுனையா? எண்ணங்கள் என்ன? அவை ஏறும் நிலையென்ன?  காலைப் போதில் வெண்ணில வாகிக்     கண்கள் சிமிட்டுவதும், காற்றாய்த் தீண்டிக் கடலாய் வருடிக்     காலம் கழிப்பதும், மாலை வானின் மஞ்சள் பூச்சை     மனத்தில் இழைப்பதும், மழை மின்னல்கள் வான வில்களை     மாற்றிக் குழைப்பதும், என்ன? புல்லாங்குழலா? புரியா அனலா? என் சொல்லுக்குள் என்ன?  ஆலய மணிகள் ஆடும் சதங்கை     அகத்தில் கேட்பதும், அண்டம் பிண்டம் அணுவின் துண்டம்     அறிவுள் பூப்பதும், ஓலைகள் அறியாப் பாமரம் போல     ஓய்ந்து கிடப்பதும், ஒற்றைப் பொறியில் உயிர்கொள் சுடரை     உயிரில் சுமப்பதும்,  என்ன? புல்லாங்குழலா? புரியா அனலா? என் சொல்லுக்குள் என்ன?  பள்ளம் மேடு பளிங்கை மேகம்     பார்த்தா பொழிகிறது? பாடல் எதிலே எப்படி உதிக்கும்?     பனியா தெரிகிறது? உள்ளம் கிணறு உற்றுப் பார்த்தால்     உணர்ச்சி பூதங்கள் ஒவ்வொரு கர்ஜனை ஒவ்வொரு சிந்தனை     உறுமும் பாடல்கள்.... என்ன? புல்லாங்குழலா? புரியா அனலா? என் சொல்லுக்குள் என்ன? அது சொல்லுங் கதையென்ன? தென்றல் மணமா? தேங்காச் ச

சொல்லுக்குள் என்ன

Image
புல்லாங்குழலா? புரியா அனலா? என் சொல்லுக்குள் என்ன? அது சொல்லுங் கதையென்ன? தென்றல் மணமா? தேங்காச் சுனையா? எண்ணங்கள் என்ன? அவை ஏறும் நிலையென்ன?  காலைப் போதில் வெண்ணில வாகிக்     கண்கள் சிமிட்டுவதும், காற்றாய்த் தீண்டிக் கடலாய் வருடிக்     காலம் கழிப்பதும், மாலை வானின் மஞ்சள் பூச்சை     மனத்தில் இழைப்பதும், மழை மின்னல்கள் வான வில்களை     மாற்றிக் குழைப்பதும், என்ன? புல்லாங்குழலா? புரியா அனலா? என் சொல்லுக்குள் என்ன?  ஆலய மணிகள் ஆடும் சதங்கை     அகத்தில் கேட்பதும், அண்டம் பிண்டம் அணுவின் துண்டம்     அறிவுள் பூப்பதும், ஓலைகள் அறியாப் பாமரம் போல     ஓய்ந்து கிடப்பதும், ஒற்றைப் பொறியில் உயிர்கொள் சுடரை     உயிரில் சுமப்பதும்,  என்ன? புல்லாங்குழலா? புரியா அனலா? என் சொல்லுக்குள் என்ன?  பள்ளம் மேடு பளிங்கை மேகம்     பார்த்தா பொழிகிறது? பாடல் எதிலே எப்படி உதிக்கும்?     பனியா தெரிகிறது? உள்ளம் கிணறு உற்றுப் பார்த்தால்     உணர்ச்சி பூதங்கள் ஒவ்வொரு கர்ஜனை ஒவ்வொரு சிந்தனை     உறுமும் பாடல்கள்.... என்ன? புல்லாங்குழலா? புரியா அனலா? என் சொ

கடைமொழி மாற்று

"கடைமொழி மாற்று" என்பது ஈற்றடியின் ஈற்றுச் சொல்லை முன்பு கொண்டுவந்து வைத்து பொருள்கொள்ளும் அணியாகும். 1) மயிலும் அலறிடும் ஆந்தை பகலிற் துயிலாது கூவும் ! மிகவும் - ஒயிலாய்க் குயில்கீச் சுங்குருவி பேசும் ! வெயிலில் பயிலாக் கிளியக வும் ! 2) முதல்நூல் சிலம்பே முதுநூல் மணியே அதனோ(டு) இணைகுண் டலமே - இதுவரை யாரும் அறிந்திடா யாப்புக் களஞ்சியம் பாருவக்கும் தொல்காப் பியம் ! கருத்து: 1) "அகவும்" என்ற சொல்லை முதலில் இட்டுப் படித்தால் மயில் அகவும் , ஆந்தை அலறும், துயிலாது குயிலும் கூவும், கீச்சும் குருவி, பேசும் கிளி என்று என்று பொருள் படும். 2) "பாருவக்கும் தொல்காப் பியம்" என்னும் ஈற்றடியை முதலில் இட்டு படித்தால் பாருவக்கும் தொல்காப்பியம் முதல்நூல், சிலம்பே முதுநூல், மணிமேகலை அதனோடு இணை, குண்டலம் இதுவரை யாரும் முழுதாய் அறியாத யாப்புக் களஞ்சியம் என்று பொருள்படும். சிறப்பு : முதல் பாடலில் மட்டும் உள்ள சிறப்பு என்னவென்றால் அகவும் என்ற ஈற்றுச்சொல்லை முதலில் இட்டாலும் வெண்பாவின் தளையும் ஓசையும் மாறாது... இவ்வாறு : அகவும் மயிலும் ! அலறிடும் ஆந்தை !

கடைமொழி மாற்று

"கடைமொழி மாற்று" என்பது ஈற்றடியின் ஈற்றுச் சொல்லை முன்பு கொண்டுவந்து வைத்து பொருள்கொள்ளும் அணியாகும். 1) மயிலும் அலறிடும் ஆந்தை பகலிற் துயிலாது கூவும் ! மிகவும் - ஒயிலாய்க் குயில்கீச் சுங்குருவி பேசும் ! வெயிலில் பயிலாக் கிளியக வும் ! 2) முதல்நூல் சிலம்பே முதுநூல் மணியே அதனோ(டு) இணைகுண் டலமே - இதுவரை யாரும் அறிந்திடா யாப்புக் களஞ்சியம் பாருவக்கும் தொல்காப் பியம் ! கருத்து: 1) "அகவும்" என்ற சொல்லை முதலில் இட்டுப் படித்தால் மயில் அகவும் , ஆந்தை அலறும், துயிலாது குயிலும் கூவும், கீச்சும் குருவி, பேசும் கிளி என்று என்று பொருள் படும். 2) "பாருவக்கும் தொல்காப் பியம்" என்னும் ஈற்றடியை முதலில் இட்டு படித்தால் பாருவக்கும் தொல்காப்பியம் முதல்நூல், சிலம்பே முதுநூல், மணிமேகலை அதனோடு இணை, குண்டலம் இதுவரை யாரும் முழுதாய் அறியாத யாப்புக் களஞ்சியம் என்று பொருள்படும். சிறப்பு : முதல் பாடலில் மட்டும் உள்ள சிறப்பு என்னவென்றால் அகவும் என்ற ஈற்றுச்சொல்லை முதலில் இட்டாலும் வெண்பாவின் தளையும் ஓசையும் மாறாது... இவ்வாறு : அகவும் மய

அதிகாலையிலே ஒரு மூலையிலே

Image
அதிகாலையிலே ஒரு மூலையிலே எனது    அம்பிகை சிரிக்கிறாள்! குதிகால் பதியப் பதிதேவருடன் எழில்    பவனியும் வருகிறாள்!  சீதநிலா நுதல் மின்னிடவே கொஞ்சிச்    சிரித்து வருகி்றாள் ஏதிலியாம் எனைக் காதலிக்க அடி    எடுத்து வருகிறாள்!  ஓர்கணத்தில் அவள் சிறுமழலை மற்றும்    மோர்கணம் முதுக்கிழவி போர்குணத்தில் அவள் காளியென்பார் மனப்    பொறுமையிற் பார்வதி! வேர்கணக்காய்த் தாங்கி வேதனை நீக்கிடும்    வேத சொரூபிணி! யார்கருத்தால் எனை நோக்கிவந்தாள் இந்த    யவ்வனப் பைங்கிளி?  காட்சியிலே துர்கை ஆட்சியிலே சக்தி    கல்வியில் பாரதி! சாட்சியிலே திரு சண்டையில் காளி    சரி!யவள் ஆதிசக்தி!  தேர்ச்சியில் நம்மை விடுத்திடும் தேவதை    தேவைக் கருளும்நிதி! ஆச்சர்ய மான கவிதைநதி! இவள்    ஆள்வ துயிரின்விதி!!  -விவேக்பாரதி 29.05.2018

யாரோ ஏதோ!

யாரோ வருகிறார்! அவர் ஏதோ தருகிறார்! சீரோ சிறப்போ பேரோ புகழோ ஏதோ தருகிறார்! ஆம் யாரோ வருகிறார்! வானத்தி லிருந்தே அவர்வரு கின்றார்    மனிதரைப் போல்வரு கின்றார்! ஞானத்தைத் தரவே அவர்வரு கின்றார்    நல்லுள மாய்வரு கின்றார்! தானமும் தவமும் செய்பவர்க் கருகில்    தங்கிட வேவரு கின்றார்! கானமும் கவிதையு மாய்வரு கின்றார்    கலைகளி லேவளர் கின்றார்! காற்றின சைவில், மலரின் சிரிப்பில்,    கடலலை காட்டிடும் விசையில், ஏற்றிய திரியில், எதிர்ப்படும் குயிலின்    எழில்குர லெழுப்பிடும் இசையில், ஆற்றலில் எல்லாம் அவர்சிரிக் கின்றார்!    ஆதவன் மதிநிறைக் கின்றார்! ஆற்றினில் மணலை அள்ளுமி டத்தும்    அவருடல் நொந்தழு கின்றார்! ஒற்றுமை இல்லா ஊரினைக் கண்டால்    உளமிகத் துயருறு கின்றார்! கற்றவர் எல்லாம் கயவர்க ளாகக்    கண்ணுற மனம்கொதிக் கின்றார்! உற்றவர் போனால் உதவிகள் ஏது?    உயிருடல் உள்ளமும் ஏது? சற்றிது நினைவோம் வருபவர் தெய்வம்!    சகவுயி ராவதும் தெய்வம்!! -விவேக்பாரதி 21.05.2018

சாதிக் கொடுமைகள் வேண்டா

Image
ஒருபுறம் பார்த்தால் தீமைகள் தலையை    உயர்த்திச் சிரிக்கின்றன, ஒருபுறம் சாதிகள் உயர்ந்து வளர்ந்தே    உயிரைக் குடிக்கின்றன, திரிபுரம் கண்ணால் தீய்த்த பிரானே    திமிறிநீ வாராயோ? எரியுற இவைதான் மழுங்கிக் கரைய    எதிர்வினை செய்யாயோ?  சாதிகள் இல்லாச் சமவெளி வேண்டும்    சந்நிதி பொதுவாகும் நீதிகள் அழியா நிலைமை வேண்டும்    நிம்மதி கருவாகும் ஆதியே வானே அண்டமே அரனே    ஆவன செய்யாயோ? ஓதி உழைத்தே உயிர்களை வாழ்த்தி    உயர்வுற உய்யோமோ?   -விவேக்பாரதி 20.05.2018

தந்தைபால் மும்மணிமாலை

காப்பு : வெண்பா அப்பா வெனவந்த ஆண்டவரை எப்போதும் ஒப்பா ரிலாத ஒருவரை - முப்பாவில் போற்றத் துணிகிறேன் பொன்னுலகத் தந்தையான ஏற்றச் சிவன்காப் பெனக்கு! நூல் : வெண்பா காப்பாக வீட்டைக் கரையேற்றும் தந்தையாலே தோப்பாய்க் குடும்பம் துலங்கிநிற்கும் - மூப்போடு நின்றாலும் இல்தாங்கும் நெஞ்சுடைய தந்தையரை என்றும் தொழுவோம் எழுந்து! (1) கட்டளைக் கலித்துறை எழுகிற போதே எதைச்செய வென்றே எழும்கரங்கள்! விழுகிற போதிலும் வீட்டினைத் தாங்கி விழுமுடலம்! அழுகிற சேதி அறியா துழைக்கும் அதிசயமாம்! தொழுகிற தெய்வமும் தோன்றிடும் தந்தையின் தோற்றத்திலே! (2) அகவல் தோற்றத் தெளிமைத் தோன்றல் தந்தை! ஏற்றம் வழங்கிடும் ஏணியு மாவார்! அன்னை தருவ தன்பை தன்மை, அறிவு தந்தையின் பரிசே! (3) வெண்பா பரிசெனத் தந்தை பகிருவ தெல்லாம் உரிமையின் பக்குவம், ஊக்கம், - கரமெனத் தாங்கிடும் தூணாகும் தந்தை சினமெலாம் தீங்கிலை நம்குற்றத் தீர்ப்பு! (4) கட்டளைக் கலித்துறை ஈர்த்திட ஆடை அணிவது மில்லை, இளமையெலாம் வேர்த்திட வோடும் வெறுமுழைப் பாளி, வெளியுலகில் வார்த்தைகள் வாங்கி வழுக்கிய போதும் வசந்தமதைக் காத்துடன் வீட்டில் கடமையிற் சேர்ப்பார் கவினுறவே! (5) அகவல் உற

தந்தைபால் மும்மணிமாலை

காப்பு : வெண்பா அப்பா வெனவந்த ஆண்டவரை எப்போதும் ஒப்பா ரிலாத ஒருவரை - முப்பாவில் போற்றத் துணிகிறேன் பொன்னுலகத் தந்தையான ஏற்றச் சிவன்காப் பெனக்கு! நூல் : வெண்பா காப்பாக வீட்டைக் கரையேற்றும் தந்தையாலே தோப்பாய்க் குடும்பம் துலங்கிநிற்கும் - மூப்போடு நின்றாலும் இல்தாங்கும் நெஞ்சுடைய தந்தையரை என்றும் தொழுவோம் எழுந்து! (1) கட்டளைக் கலித்துறை எழுகிற போதே எதைச்செய வென்றே எழும்கரங்கள்! விழுகிற போதிலும் வீட்டினைத் தாங்கி விழுமுடலம்! அழுகிற சேதி அறியா துழைக்கும் அதிசயமாம்! தொழுகிற தெய்வமும் தோன்றிடும் தந்தையின் தோற்றத்திலே! (2) அகவல் தோற்றத் தெளிமைத் தோன்றல் தந்தை! ஏற்றம் வழங்கிடும் ஏணியு மாவார்! அன்னை தருவ தன்பை தன்மை, அறிவு தந்தையின் பரிசே! (3) வெண்பா பரிசெனத் தந்தை பகிருவ தெல்லாம் உரிமையின் பக்குவம், ஊக்கம், - கரமெனத் தாங்கிடும் தூணாகும் தந்தை சினமெலாம் தீங்கிலை நம்குற்றத் தீர்ப்பு! (4) கட்டளைக் கலித்துறை ஈர்த்திட ஆடை அணிவது மில்லை, இளமையெலாம் வேர்த்திட வோடும் வெறுமுழைப் பாளி, வெளியுலகில் வார்த்தைகள் வாங்கி வழுக்கிய போதும் வசந்தமதைக் காத்துடன் வீட்டில் கடமையிற் சே

வேண்டா மனம்

சத்தியம் சொல்லிடு வாயா? - மனம்    சல்லாபக் கட்டினிற் சிக்குறும் பேயா? நித்தமும் ஆடுவ தென்ன? - இது    நீட்டி முழக்கிடும் விண்ணப்பம் என்ன? சொல்லடி சொல்லடி காளி! - இதன்    சோதனை யாலுளம் எங்கணும் ஊழி! நில்லடி நில்லடி காளி - என்    நினைவினில் ஏறிநீ கொல்லடி காளி! ஒன்றை வெறுத்திடச் சொல்லும் - மற்    றொன்றை நினைத்து மருண்டது செல்லும் நன்றைப் பிரிந்துப்பின் கூடி - இது    நாளும் நடித்திடும் நாடகப் பேடி! நேற்றை நினைப்பது வாழ்வா? - நாளை    நேர்வதை எண்ணி நடப்பது வாழ்வா? ஏற்றது மேதெனச் சொல்வாய்! - மனம்    என்றும் நிகழ்த்தும் பகைதனைக் கொல்வாய்! மாய மனமின்னும் வேண்டா - அது    மாற்றி மாற்றிச்செயும் செய்கையும் வேண்டா தாய்நின் அருட்பதம் போதும் - அதைத்    தாங்கிவிட் டாலினி ஏதுண்டு சேதம்? -விவேக்பாரதி 16.10.2017

ஈசனை எண்ணி

Image
சூல்கொண்ட பொய்யும் சுழற்றிடும் ஆசையும் வேல்போலப் பின்தொடரும் வேதனையும் - நாள்கொண்ட வாசனையும் நீங்கி வளம்பெறவே சித்தத்தில் ஈசனை எண்ணி இரு!  இருவினையும் மும்மலமும் இம்சையெனச்சுற்றப் பொருள்தேடும் நெஞ்சம் பொருத - இருட்காட்டில் தத்தளிக்கும் நேரத்தில் தாங்கவரும் பொற்கிரணம் முத்தணித்த வெள்ளி முகம்! முகம்பார்த்துப் பாடி முகிழாத போதும் அகம்பார்த்துத் தேடி அகழாத போதும் ஜகம்பார்க்க நெஞ்சில் ஜனிக்கின்ற ரூபம் சிகைத்தோற்ற மான சிவம்! சிவமே இமயம் சிவமே உலகம் சிவமே உயிரின் சிவிகை - சிவமே பவம்நீக்கும் பற்று பரக்கருணைத் திட்டு தவம்தேக்கு நெஞ்சே தளர்ந்து! தளரும் மனத்தினைத் தாங்கும் சிவமே வளரும் கொடிக்கு வலுவும்! - மிளிரும் சடைமேல் இருக்கும் நிலவும் நெருப்பும் இடைமேல் அதளும் இதம்! இதமென நாதத் திசையென வேதப் பதமெனப் பாடும் படியே - நிதமும் நடம்புரி ஈசன் நமன்பயம் எற்றி உடம்பிடை ஆவான் உயிர்! உயிருக்குள் ஆடும் உமைநாதன் ஆட்டம் பயிருக்குள் காற்றும் பயிலும் - வெயிலுக்கு நீழல் மழைக்குக் குடையும் சிவனேதான் வாழல் நமக்கு வரம்! வரமென்று கேட்காது வாரி வழங்கும் கரமந்த ஈசன் கரமே - சிரமொன்று பற