கடமை இன்றே

மல்லிகை மலர்க ளெல்லாம்
    மறுமுறை சிரிப்ப தில்லை
முல்லைகள் அடுத்த நாளில்
    முறுவலைத் தரிப்ப தில்லை
ஒல்லையில் செய்யா துற்ற
    ஒன்றுமே பிற்கா லத்தில்
நல்விதம் நிகழ்வ தில்லை
    நடத்துக கடமை இன்றே!!


ஒல்லை - விரைவு

-விவேக்பாரதி
02.05.2018

Comments

Popular posts from this blog

கவிதை ஆண்டாள் - 1

மரகதப் பஞ்சகம்

மாதங்களில் அவள் மார்கழி